மின்தடையால் சுவாச கருவி செயல்படவில்லை: தனியார் ஆஸ்பத்திரியில் 18 நோயாளிகள் சாவு…!!

Read Time:4 Minute, 47 Second

8b5c0e37-2d25-4186-b6fe-e977d372aadc_S_secvpfசென்னை மணப்பாக்கத்தில் மியாட் தனியார் மருத்துவமனை உள்ளது.

அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 100 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வந்தது.

சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக மணப்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மியாட் மருத்துவமனைக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.

இதையடுத்து மருத்துவமனையின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஜெனரேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்துக்கான வெண்டிலேட்டர் கருவிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு யாரும் எதிர்பாராத வகையில் ஜெனரேட்டர் அறைக்குள் மழை நீர் புகுந்தது. வெள்ளம் போல திரண்டு வந்த தண்ணீரால் ஜெனரேட்டர் இயங்குவது நின்று போனது. இதனால் ஜெனரேட்டர் மூலம் மருத்துவமனை சிகிச்சை அறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இன்டன்சிவ் கேர் யூனிட் எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் செயற்கை சுவாசம் பெற்று வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். வெண்டிலேட்டர் துணை இல்லாததால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சுவாசம் பெற முடியாத காரணத்தால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் ஒவ்வொருவராக உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை அடுத்தடுத்து 18 நோயாளிகள் உயிரிழந்தனர்.

அவர்களில் 16 பேர் யார்–யார் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

1. சொக்கலிங்கம், வளசர வாக்கம்.

2. கணேசன் (28), மேற்கு மாம்பலம்.

3. பச்சையம்மாள், வேலூர்.

4. ரத்தினராஜ், வியாசர்பாடி.

5. கலையரசன் (52), அண்ணனூர்.

6. தாமஸ் (80)

7. விசாலாட்சி (79)

8. செல்லியம்மாள் (60)

9. சண்முகம் (82)

10. நெல்சன்

11. ரகுபதி ராஜு (63)

12. ஜெரோம் (28)

13. மோகன்

14. வடிவேல் (38)

15. ரத்தினம்மாள்.

16. பரஞ்ஜோதி (53).

உயிரிழந்த 18 நோயாளிகளின் உடல்கள் இன்று பகல் 11 மணியளவில் ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கதறி அழுதபடி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். இதனால் இன்று மதியம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பகுதியெங்கும் அழுகுரல் கேட்டபடி இருந்தது.

மின்சாரம் துண்டிப்பு காரணமாக செயற்கை சுவாசம் கிடைக்காமல் 18 நோயாளிகள் இறந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். உடனடியாக அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

தனியார் மருத்துவமனைகளில் மின் தடையால் ஏற்பட்டுள்ள சோக சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் உள்ள மற்ற தனியார் மருத்துவமனைகளை மருத்துவ துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார் மருத்துவமனையில் கைவலிக்கு சிகிச்சை பெற்றவர் பலியான பரிதாபம்: மகன் கதறல்…!!
Next post காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைக்கு 98 பேர் பலி…!!