சுவிஸில் விபத்துக்களை தடுக்க விசேட நடவடிக்கை..!!

Read Time:2 Minute, 51 Second

timthumb (1)சுவிஸ்சர்லாந்து ஆல்ப்ஸ் மலை தொடருக்கு வரும் அந்நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா துறையினருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கமாறு எஸ்.ஏசி பாதுகாப்பு நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.

காரணம் கடந்த வருடம் அதிகமானோர் அங்கு வந்ததாகவும் அதைவிட அதிகமானோர் இந்த வருடம் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த வருடம் அனேகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் 330 விபத்துக்களும் கடந்த வருடம் சுவிஸ் மலைகளைச் சுற்றி 2,400 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.ஏசி இடைக்கால புள்ளிவிபத்தில் குறிப்பிட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 106 இருந்து 150ஆக அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் பிரதானமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விபத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. இது தொடர்பில் எஸ்.ஏசியின் பாதுகாப்பு தலைவர் உய்லி மொஸிமன் தெரிவிக்கையில், 2014ஆம் ஆண்டு கோடையை விட இந்த ஆண்டு அதன் அழகும் மக்களின் வருகையும் அதிகமாக காணப்படும் அதனால் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

மேலும், இந்த கோடையில் அனேகமாக உருகும் பனிப்பாறைகள் மற்றும் நிரந்தர பனிக்கட்டிகள் என்பன சூடான கோடை காரணமாக ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். பாரிய பாறைச் சரிவுகள் ஏற்படலாம் அல்லது பனிப்பாறை சரிலுகள் கூட ஏற்படலாம் காரணம் கடந்த வருடமும் இது போல் குறிப்பிடத்தக்க விடயங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனவே அது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துவோம்.

பெரும்பாலான விபத்துக்கள் நடைபயணம் மெற்கொள்வதாலே இடம்பெறுகின்றது. அதாவது நடைபயணம் மூலம் 965 பேர் காயமடைகின்றனர். அதில் 59 பேர் மரணமடைகின்றனர். கடந்த கோடை காலத்தில் இந்த எண்ணிக்கை முறையே 792 மற்றும் 31 இருந்தது குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்..!!
Next post வடசேரி பஸ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்: 30 பேர் தப்பினர்..!!