வடசேரி பஸ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்: 30 பேர் தப்பினர்..!!

Read Time:2 Minute, 8 Second

1f2d4cf5-75b4-464f-94b6-e8fad5b7cedc_S_secvpfநாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று பகல் ஏராளமான பஸ்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு கொண்டிருந்தன.

வடசேரியில் இருந்து பிள்ளை தோப்பு செல்லும் பஸ் பகல் 11 மணிக்கு புறப்பட்டது. பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். அவர்கள் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர். டிரைவர் பஸ்சை இயக்கியதும் திடீரென பஸ்சின் முன்பக்க என்ஜினில் இருந்து லேசாக புகை வந்தது. சற்று நேரத்தில் அதில் இருந்து தீப்பொறியும் கிளம்பியது.

இதைக்கண்டு பஸ்சில் இருந்த பயணிகளும், பெண்களும் அலறினர். அதற்குள் என்ஜின் முழுவதும் தீ மள மளவென பிடித்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகளும், பெண்களும் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பிடித்த பஸ்சின் என்ஜீனில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளை மாற்று பஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸில் விபத்துக்களை தடுக்க விசேட நடவடிக்கை..!!
Next post எகிப்தில் கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு; 16 பேர் சாவு..!!