ஜப்பான் அணுக்கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதக்கிறது: விஞ்ஞானிகள் கவலை…!!

Read Time:1 Minute, 31 Second

569ad425-8f5f-417f-8af0-e4c3f2128438_S_secvpf2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டு அங்குள்ள புகுஷிமா அணுசக்தி நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த அணுசக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணுக்கழிவு பொருட்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

தற்போது இந்த அணுக்கழிவுகள் மெல்ல மெல்ல நகர்ந்து ஜப்பானில் இருந்து 2,574 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகர கடற்கரையோர பகுதிக்கு சென்று உள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும் கவலை அடைந்து இருக்கிறது. ஏனெனில் இந்த அணுக்கழிவு பொருட்களில் சிறிதளவு கதிரியக்கத் தன்மை இன்னும் இருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

இது அமெரிக்க கடற்பரப்புடன் கலப்பதால் கடல் நீர் மாசுபடுவதுடன், மனிதர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் கடும் நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு…!!
Next post ஆஸ்பத்திரியில் 18 பேர் பலியான சம்பவம்: ஒரே வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை..!!