By 6 December 2015 0 Comments

அனைத்து போர் பணிகளிலும் பெண்களுக்கு அனுமதி! அமெரிக்கா அறிவிப்பு..!!

women_combat_001முன்னணி போர்நிலைகள் உட்பட இராணுவத்தின் அனைத்து போர் பணிகளிலும் பெண்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் இதற்கு மேலும் தாமதம் ஏற்படக் கூடாது என்று கூறிய கார்டர், அடுத்த ஆண்டு முதல் ராணுவத்தின் அனைத்து போர் பணிகளிலும் பெண்களின் பங்களிப்பும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பதட்டம் நிறைந்த பகுதிகளில் 3 லட்சம் பெண் வீராங்கனைகள் திறம்பட பணியாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



Post a Comment

Protected by WP Anti Spam