By 26 November 2007

ஆவலுடன் எதிர்பாருங்கள்… இதோ வருகிறார்; தலைவர் வரப்போறார்! அவர் என்ன சொல்லப் போறார்??

lttepiraba-kartoon.jpgஇது கார்த்திகை மாதம். பொங்கு தமிழர் பெருமையாய் கொண்டாடும் மாதம். விசப்பூவை நினைவுபடுத்தும் மாதம். கொலைக்களம் அனுப்பியே கொண்டாடுகின்ற மாதம். காலம் பூராவும் புற்றுக்குள் குடி கொண்டிருக்கும் கழுத்திலும், உடலிலும் விசத்தைக் கொண்டிருக்கும் கருநாகம் தான் குடியிருக்கும் புற்றிலிருந்து வெளிவரும் மாதம். கார்த்திகை 27ல் கருநாகம் வெளிவரும். கண்களை அங்குமிங்கும் உருட்டி மிரட்டல் பார்வை பார்க்கும். கமராக்கள் பளிச்சிடும். நாகதம்பிரான் தரிசனத்திற்காக ஏங்கித் தவிக்கும் புலம்பெயர் பொங்கு தமிழர்கள் அரோகரா நாகதம்பிரான் என்று பொங்கிப் பிரவாகித்து தலையில் குட்டிக்கொள்வர். கார்த்திகை 26 பங்கர் பெருமான் பிறந்ததினம். கார்த்திகை 27ல் பங்கர் பெருமான் எழுந்தருளி உரை வாசிப்பார். தன் இனத்தையே விழுங்கித் தின்று வீங்கிப்பருத்த கடலாமையொன்று தொப்பியும் கண்ணாடியுமணிந்து இரண்டு கால்களில் எழுந்து நிற்பது போன்றதொரு உருவம். அல்லது ஆட்டுக்கல்லுக்கு ஆமி உடுப்பு போட்டு விட்டது மாதிரி ஒரு உருவம்போட்டோவிற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து விட்டு பின்பு உரை வாசிக்கும்.

ஆவலுடன் எதிர்பாருங்கள்… இதோ வருகிறார்; தலைவர் வரப்போறார்! அவர் என்ன சொல்லப் போறார்??

அது என்ன கார்த்திகை 27 அப்படியொரு விசேட நாள்??

புதிதாக உருவாக்கப்பட்ட பாரிய ஆகாய விமானமான எயர்பஸ் 380 வெள்ளோட்டம் சென்று நாளை மீண்டும் தரையிறங்குகிறதா?

விண்வெளி சென்ற விண்கலம் பல நாட்களின் பின் மீண்டும் பூமிக்கு வந்து தரையிறங்கும் நாளா?

அல்லது புனித பாப்பரசர் மக்களைச் சந்தித்து ஆசீர்வதிக்கும் நாளா?

அல்லது மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து சுபீட்சமான அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்த தியாகச் செம்மல்பிறந்த நாளா?

இவை எதுவுமேயில்லை…….

இது கார்த்திகை மாதம். பொங்கு தமிழர் பெருமையாய் கொண்டாடும் மாதம். விசப்பூவை நினைவுபடுத்தும் மாதம். கொலைக்களம் அனுப்பியே கொண்டாடுகின்ற மாதம்.
காலம் பூராவும் புற்றுக்குள் குடிகொண்டிருக்கும் கழுத்திலும் உடலிலும் விசத்
தைக் கொண்டிருக்கும் கருநாகம் தான் குடியிருக்கும் புற்றிலிருந்து வெளிவரும்
மாதம்.

கார்த்திகை 27 ல் கருநாகம் வெளிவரும். கண்களை அங்குமிங்கும் உருட்டி மிரட்டல் பார்வை பார்க்கும். கமராக்கள் பளிச்சிடும். நாகதம்பிரான் தரிசனத்திற்காக ஏங்கித்தவிக்கும் புலம்பெயர் பொங்கு தமிழர்கள் அரோகரா நாகதம்பிரான் என்று பொங்கிப் பிரவாகித்து தலையில் குட்டிக்கொள்வர்.

கார்த்திகை 26 பங்கர் பெருமான் பிறந்ததினம். கார்த்திகை 27ல் பங்கர் பெருமான் எழுந்தருளி உரைவாசிப்பார். தன் இனத்தையே விழுங்கித் தின்று வீங்கிப்பருத்த கடலாமையொன்று தொப்பியும் கண்ணாடியுமணிந்து இரண்டு கால்களில் எழுந்து நிற்பது போன்றதொரு உருவம். அல்லது ஆட்டுக்கல்லுக்கு ஆமி உடுப்பு போட்டு விட்டது மாதிரி ஒரு உருவம்போட்டோவிற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்து விட்டு பின்பு உரை வாசிக்கும்.

தலைவர் உரையில் என்ன சொல்லப் போகிறார் என்று புலம்பெயர் பொங்கு தமிழர்களும் தமிழ்ப் பினாமி ஊடகங்களும் காதைத் தீட்டிக் கொண்டிருப்பர். இந்த உருவத்தின் உரையில் அப்படியென்ன முக்கியத்துவம்??

தமிழ் மக்களைச் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து மீட்டெடுத்து தமிழீழம் அமைத்து விட்டதா? இல்லை தமிழினத்தை சிங்களவனுக்குத் தத்துக் கொடுத்து விட்டு தான் மட்டும் வன்னிக்காட்டில் பதுங்கி வாழ்கின்றது. இருபத்தைந்து வருடங்களாக தமிழன் உயிரைத் தானும் தின்று சிங்களவனுக்கும் தின்னக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

தமிழன் துயர் தீரக் கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை தன் லாபத்திற்காக உதாசீனம் செய்து தமிழன் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டு தன் குடும்பத்தை மட்டும் சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இம்முறை இது தனது உரையில் எதனை வாசிக்கப் போகின்றது. யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றி பன்னிரண்டு வருடங்களாகின்றது. யாழ்ப்பாணத்தின் வாசலில் நிற்கிறோம். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவோம். ஆனையிறவு முகாமைத் துவம்சம் செய்தோம். முகமாலையில் இராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தோம். தமிழீழத் தனியரசே முடிவு. யுத்தம் மூலம் தான் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்…. இப்படி அனைவர் காதிலும் பூச்சுற்றும் உரைகளை இது வாசிக்கும்.

இது யுத்தச் சூளுரை விடுத்த நாளிலிருந்து இராணுவம் பல வெற்றிகளைப் பெற்று கிழக்கு மாகாணம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. வடபகுதியில் மேலும் பல இடங்களையும் இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இம்முறை தனது பிறந்த நாளுரையில் பினாத்துவதற்கு வீரப்பிரதாபமேதும் இல்லாததால் இருபத்தொரு கரும்புலிகளை அனுப்பி விமானப்படை முகாம்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் மூலம் தனது கடந்தகாலத் தோல்விகளை மறைக்க முற்பட்டுள்ளது.

நாம் யுத்தநிறுத்தத்தை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றோம். ஆனாலும் தற்காப்பு யுத்தம் ஒன்றைச் செய்ய வேண்டிய நிலைக்கு சிங்களதேசம் எங்களை ஆளாக்கியுள்ளது….

தமிழில் வசனம் எழுதுவதற்கா தட்டுப்பாடு?? தமிழில் கேட்ட கேள்விக்கே விளங்க முடியாமல் முழி பிதுங்கி வழியும் ஒருவர் நாளை தனது பிறந்தநாள் சிறப்புரையை வாசிப்பார். (இது எப்படியிருக்கு??)

நன்றி:- ஈழநாசம் இணையம்

lttepiraba-kartoon.jpgComments are closed.