உலகம் அழிந்து விடுவதாக நம்பி குகையில் பதுங்கி வாழும் ரஷ்ய கிராமவாசிகள்

Read Time:3 Minute, 0 Second

உலகம் அழியப் போகிறது என்ற கிறிஸ்தவப் பாதிரியாரின் போதனையை நம்பி ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிலர், குகைகளில் பதுங்கி வாழ்கின்றனர். ரஷ்யாவில் உள்ள பெலாரூசுக்கு அருகே உள்ளது நிகோல்ஸ்கோய் கிராமம். இங்குள்ள 29 பேரை திடீர் என காணவில்லை. வீடுகளை விட்டு அவர்கள் வெளியேறியவர்கள் எங்கு சென்றார்கள் என்ற விவரம் மர்மமாக இருந்தது. வெளியுலகுக்கும் இது தெரியவில்லை. மாஸ்கோவைச் சேர்ந்த கூனெட்சோவ் என்பவர் சில நாட்களுக்கு முன் கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்தார். நிகோல்ஸ்கோய் கிராமத்திற்கு சென்ற போது பல வீடுகள் காலியாக இருந்ததைக் கண்டு பிடித்தார். விசாரித்த போது 29 பேர் மாயமானது தெரியவந்தது. இது பற்றி அவர் ரஷ்ய போலீசுக்கு தகவல் சொன்னார். போலீசார் விசாரணை நடத்தினர். மாயமானவர்கள் ஒரு குகையில் ஒளிந்திருந்ததைக் கண்டு பிடித்தனர். இது போலீசாருக்கு வியப்பை ஏற்படுத்தியது.வசதியான வீடுகளை விட்டு, கற்கால மனிதன் போல் குகையில் அவர்கள் தங்கியிருப்பதற்கான காரணம் பற்றி விசாரித்தனர். அப்போது தான் அந்த `திடுக்’ தகவல் வெளியே தெரிந்தது. சில நாட்களில் உலகம் அழிந்து விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் குகையில் மறைந்து வாழ்வது தெரியவந்தது. குகையில் இருந்தவர்களிடம் போலீசார் பேச முயன்றனர்.

கிராமமக்கள் அஞ்சி நடுங்கி பேச மறுத்து விட்டனர். குகைக்குள்ளும் போலீசாரை நுழைய விட மறுத்து விட்டனர்.கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 29 பேரில் பாதிரியார் ஒருவரும் உள்ளார். உலகம் அழிந்துவிடப் போகிறது என்று கூறி குகைக்கு அழைத்து வந்தது அவர்தான். அவரது பேச்சை நம்பியே மக்கள் குகையில் பதுங்கியுள்ளனர்.

அவர்களை மீட்க ரஷ்ய அரசு மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. குகையை விட்டு வெளியேற அவர்கள் மறுத்து விட்டனர். உலகம் அழிந்தால் குகையும் சேர்ந்துதான் அழியும் என்பது என்ற விவரம் சிவப்பு நாட்டு கிராம மக்களுக்கு மட்டும் புரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post ஹீரோவாகிவிட்ட செந்தில்! -கவுண்டர் ஆசிர்வாதம்