அப்பா “துறுதுறு’ என இருந்தால் மகன் படு சுறுசுறுப்பு தான்!

Read Time:2 Minute, 39 Second

“தாயை விட, தந்தையை போலத்தான் மகன் வளர்வான்; தந்தை சுறுசுறுப்பாக இருந்தால், கண்டிப்பாக மகனும் மிகவும் “துறுதுறு’ என்று இருப்பான்! பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் , சர்வேயில் இது தெரியவந்துள்ளது. சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளை “பொத்தி பொத்தி’ வளர்க்கக்கூடாது. அவர்களுக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும். அதுபோல, ஆரோக்கிய உடல் நலனுக்கு ஏற்ப, உணவு, பழக்கவழக்கங்களையும் வளர்க்க வேண்டும். தந்தை போலத்தான் மகன் இருப்பான். தந்தை மந்தமாக இருந்தால், குழந்தையும் மந்தமாகத்தான் இருக்கும். குழந்தையை கொஞ்சுவதுடன், சுறுசுறுப்புடன் இருக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.சைக்கிள், நீச்சல் போன்ற பயிற்சிகளை அளித்து வருவதுடன், உணவுப்பழக்கத்தை முறையாக கடைப்பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். உணவுப்பழக்கம், பெற்றோரை பார்த்துத்தான் குழந்தைகளுக்கு வருகிறது. அதனால், அப்படி குழந்தையை பராமரித்து வந்தால், ஒபிசிட்டி, சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் வரவே வராது. உடல் பயிற்சி உள்ளவரின் குழந்தைக்கு நல்ல உடற்பயிற்சி ஆர்வம் காணப்படுகிறது. தந்தை செய்வதை எல்லாம் குழந்தை பின்பற்ற ஆரம்பிப்பதால் அவர்களுக்கு சுறுசுறுப்பு ஏற்படுகிறது.ஆனால், எங்களின் ஆய்வில் தெரியவந்த வித்தியாசமான தகவல், சிகரெட் பிடிப்பவர்களின் குழந்தை, சுறுசுறுப்பு மற்ற குழந்தைகளை விட அதிகமாக இருப்பது தான்.கம்ப்யூட்டரில் மூழ்குவது, சாட் உணவு சாப்பிடுவது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளும், அதே பாணியில் தான் வளரும். பின்னாளில், பல கோளாறுகள் ஏற்பட பெற்றோர் தான் காரணம். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குடாநாட்டில் நடைபெற்ற மோதல்களையடுத்து இராணுவத் தளபதி அவசர விஜயம்
Next post மதம் பிடித்த தனியார் யானை 20 கி.மீ., ஓடியதால் பரபரப்பு