காதல் வலைவிரிக்கும் புன்னகை * பல் பராமரிப்பில் பெண்கள் ஆர்வம்
இளைஞர்களை காதல் வலையில் சிக்க வைக்க, பல் டாக்டரை தேடி ஓடும் பெண்கள் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. காதல் வலையில் புன்னகை முக்கிய இடம் பெறுகிறது. பிரிட்டன் இளம்பெண்கள், புன்னகையை கவர்ச்சியாக வைத்துக்கொள்ள தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்காக பல் டாக்டர்களை தேடி ஓடுவது அதிகரித்து வருகிறது. “பளிச்’பற்களை பெறவும், பல் கவர்ச்சியை ஏற்படுத்துவும் பெண்கள் விரும்புகின்றனர். 45 வயது முதல் 54 வயதுக்கு உட்பட்ட பெண்கள்தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கவர்ச்சியான பல்லுக்காக டாக்டரை நாடும் இரண்டாயிரம் பெண்களிடம் இது சம்பந்தமான ஆய்வு நடந்தது. கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவது நடுத்தர வயது பெண்கள்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்த பற்களே மூலதனம் என்று பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டன் டார்டர்களில் முகச்சீரமைப்புக்கு ஆலோசனை வழங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.