பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது; 80 போலீஸ் அதிகாரிகள் காயம்

Read Time:3 Minute, 18 Second

பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது. 30 கார்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. 80 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து குடியேறியவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் இளைஞர்களாக இருப்பவர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அடிக்கடி சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய 2 இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு அதில் ஏறி தப்பிக்க முயன்றனர். அவர்கள் வேகமாக வந்த போது, எதிரே ரோந்து வந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதினர். அவர்கள் ஹெல்மட் அணியாததால், தலையில் அடிபட்டு இறந்தனர். அவர்கள் இருவருமே 15 மற்றும் 16 வயது உடையவர்கள். இதை பார்த்த மற்ற ஆப்பிரிக்க இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கோபம் போலீசார் மீது திரும்பியது. அவர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினார்கள். போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்தனர்.

80 போலீஸ் அதிகாரிகள் காயம்

இந்த கலவரம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. அப்போது இளைஞர்கள் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். அதோடு கற்களை வீசி தாக்கினர். இதில் 80 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். 70 கார்களுக்கு தீ வைத்தனர். 2 பள்ளிக்கூடங்கள், ஒரு நூலகம் உள்பட பலகட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது. கடைகளுக்குள் புகுந்து இளைஞர்கள் கொள்ளையடித்தனர். 2 இளைஞர்கள் இறந்ததற்கு பழிக்கு பழி வாங்குவதற்காகத் தான் போலீசாரை தாக்குகிறோம் என்று கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

சீனாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரான்சு அதிபர் சர்கோசி, இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்கவேண்டும் என்றும், யார் செய்தது தவறு என்பதை கோர்ட்டு முடிவு செய்யும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2005-ம் ஆண்டு இது போல கலவரம் பிரான்சு முழுவதும் நடந்தது. அப்போதும் 2 இளைஞர்கள் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அது 3 வாரம் நீடித்தது. 300 கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 10 ஆயிரம் கார்களுக்கும் தீவைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல் * “டிவி’யில் ஒளிபரப்பு; பெரும் பரபரப்பு
Next post திருமணத்திற்கு சாட்சியாக நடிகை காவேரி “நைட்டி’ * போலீஸ் அதிர்ச்சி