தொலைபேசி, போதைப்பொருளை பெண்ணுறுப்புக்குள் ஒளித்துவைத்து சிறையிலுள்ள கணவருக்கு கொண்டுசெல்ல முற்பட்ட பெண்..!!

Read Time:3 Minute, 11 Second

13633Alison-McGuireபிரித்­தா­னிய சிறைச்­சா­லை­யொன்­றி­லுள்ள தொலை­பேசி மற்றும் போதைப் பொருளை பெண்­ணு­றுப்­புக்குள் ஒளித்­து­வைத்து சிறைச்­சா­லை­யி­லுள்ள தனது கண­வ­னுக்கு கொண்­டு­செல்ல முற்­பட்ட பெண்­ணொ­ருவர் சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார்.

45 வய­தான எலிஸன் மெக்­குய்ரி எனும் இப்பெண் மேற்­படி சிறைக் கைதியை திரு­மணம் செய்­வ­தற்­காக, சிறைக்­கா­வலர் பணி­யி­லி­ருந்து வில­கி­யவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஸ்கொட்­லாந்தின் வெஸ்ட் லோத்­தியன் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் எலிஸன் பணி­யாற்­றி­ய­போது அவ­ருக்கும் கொள்ளை குற்­றச்­சாட்டில் சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி­யான ஜேம்ஸ் மெக்­குய்­ரிக்கும் இடையில் காதல் ஏற்­பட்­டது.

ஜேம்ஸ் மெக்­குய்­ரியை திரு­மணம் செய்­வ­தற்­காக சிறைக்­கா­வலர் பணி­யி­லி­ருந்து எலிஸன் வில­கினார். சிறைச்­சா­லைக்­குள்­ளேயே இவர்­களின் திரு­மணம் நடை­பெற்­றது.

இந்­நி­லையில் தொடர்ந்தும் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள தனது கண­வ­ருக்­காக தனது பெண்­ணு­றுப்­புக்குள் வைத்து தொலை­பேசி ஒன்­றையும் போதைப் பொரு­ளையும் சிறைச்­சா­லைக்குள் கடத்திச் செல்ல முற்­பட்­ட­தாக எலிஸன் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அவர் சிறைக்குள் செல்ல முற்­பட்­ட­போது மோப்­பநாய் எச்­ச­ரிக்கை செய்­தது. அதை­ய­டுத்து அதி­கா­ரிகள் அவரை சோத­னை­யிட்­ட­போ­திலும் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால், அவர் அசா­தா­ரண வித­மாக நடந்து செல்­வதை அவ­தா­னித்த அதி­கா­ரிகள் அவரை சோத­னைக்­குட்­ப­டுத்­து­வ­தற்­காக வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல தீர்­மா­னித்­தனர்.

ஆனால், பொலிஸ் காரில் வைத்­தி­ய­சாலை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த­போது, மிகவும் சிர­மப்­பட்ட எலிஸன் அப்­பொ­ருட்­களை வெளியே எடுக்க ஆரம்­பித்தால் காரை நிறுத்த வேண்­டி­யி­ருந்­த­தாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின் அப்பொருட்களை தனது கணவருக்காக சிறைக்குள் கடத்திச் செல்ல முற்பட்டதாக எலிஸன் ஒப்புக்கொண்டார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானில் பரவும் பன்றிக் காய்ச்சலுக்கு 33 பேர் பலி…!!
Next post 25 ஆயிரம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குகிறது எஸ்.டி.பி.ஐ.