முஷரப் ராணுவத்திடம் விடை பெற்றார்

Read Time:1 Minute, 22 Second

பாகிஸ்தான் அதிபர் முஷரப் ராணுவத்தளபதி பதவியில் இருந்து விலக இருக்கிறார். இதற்காக அவர் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று விடைபெற்றார். ராணுவத்தளபதி பதவி விலகும்போது ஒவ்வொரு ராணுவப்பிரிவுக்கும் சென்று வருவது பாரம்பரியமாக நடக்கும் விடைபெறும் நிகழ்ச்சி ஆகும். இதன்படி அவரும் சென்று வந்தார். 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராணுவத்தளபதி பதவி இல்லாமல் சிவிலியன் ஜனாதிபதியாக இருக்க தீர்மானித்து இருக்கிறார். 9 ஆண்டுகளாக அவர் ராணுவ தளபதி பதவியில் இருந்தார். அவர் 1998-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ராணுவத்தளபதி பதவியில் நவாஸ் ஷெரீப்பால் அமர்த்தப்பட்டார். ஜியா உல் ஹக்குக்கு பிறகு நீண்டகாலம் ராணுவத்தளபதியாக இருந்தவர் முஷரப் தான். 64 வயதான முஷரப் தன் பதவியை ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கியானியிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலேசியாவில்: மூன்று தமிழர்கள் அவர்கள் பேசிய தமிழின் மொழியாக்கம் புரியாததால் விடுதலை
Next post காதல் வலைவிரிக்கும் புன்னகை * பல் பராமரிப்பில் பெண்கள் ஆர்வம்