எனது வளர்ச்சியை இம்ரான்கான் தடுத்ததால் விவாகரத்து செய்தேன் – முன்னாள் மனைவி பேட்டி..!!

Read Time:2 Minute, 34 Second

cb2576c9-1034-481b-8b5c-30fb4ace8767_S_secvpfபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஜெமீலா என்ற இங்கிலாந்து பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து மூலம் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ரேஹம் என்ற பெண்ணை இம்ரான்கான் 2–வது திருமணம் செய்தார். இவர் பிபிசி டி.வி.யில் பணி புரிந்தார். இவருடன் ஆன திருமண வாழ்க்கையும் 10 மாதங்களில் முடிந்து விட்டது. தற்போது இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதற்கான காரணம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இம்ரான்கானுடன் விவாகரத்து ஏற்பட்ட காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது:–

‘பெண்களுக்கான அதிகாரம்’ என்ற தலைப்பில் இந்தியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேச எனக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டு புறப்பட தயாரானேன். அதற்கு இம்ரான் கான், அவரது பாகிஸ்தான் தெக்ரிக்– இன்சாப் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் கடைசி நேரத்தில் எனது பயணத்தை ரத்து செய்தேன். திருமணத்துக்கு பிறகு பெண்கள் முழுவதுமாக தங்களை மறந்து விடுகின்றனர். அவர்களது அடையாளங்களையும் தொலைக்கின்றனர். கணவரின் விருப்பப்படி நடக்கின்றனர்.

அது போன்று தான் நானும் எனது கணவருடன் (இம்ரான்கானுடன்) ஆன உறவுக்காக விட்டுக் கொடுத்தேன். அதற்காக தற்போது வருந்துகிறேன். அது போன்று அவர் பல விதங்களில் எனது வளர்ச்சியை தடுத்து வந்தார்.

இதனால் எங்களது உறவு பலவீனம் அடைந்து உடைந்தது. இது போன்ற தருணங்களில் எனது உரிமைகளை பாதுகாக்க யாரும் முன்வரவில்லை. எனவே எங்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு: 15 பேர் பரிதாப பலி…!!
Next post இங்கிலாந்தில் மென்சா கிளப்பில் இந்திய சிறுவன்…!!