பிலிப்பைன்ஸை தாக்கிய புயலால் 7,50,000 பேர் வெளியேற்றம்…!!

Read Time:3 Minute, 31 Second

13722513404-01-02பிலிப்­பைன்ஸில் மெலர் என்ற சூறா­வளி தாக்­கி­ய­தை­ய­டுத்து சுமார் 7,50,000 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பிலிப்­பைன்­ஸின் வடக்கு முனை­யான சமர் என்ற தீவில் நேற்று அதி­காலை மெலார் புயல் தாக்­கி­யது. மணிக்கு 185 கிலோ­மீற்றர் வேகத்தில் பயங்­கர காற்று வீசி­யது. இங்­குள்ள 1,50,000 மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு சென்­றதால் உயிர்ச்­சேதம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை என்று அந்­நாட்டு வானிலை நிலையம் தெரி­வித்துள்ளது.

இத­னி­டையே சுமார் 40 உள்ளூர் விமான சேவைகள் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. 73 கப்­பல்­களும் நூற்­றுக்­க­ணக்­கான மீன் பிடிப் பட­கு­களும் துறை­மு­கத்­தி­லேயே தங்­கி­யி­ருக்­கும்­படி உத்­த­ரவு பிரப்பிக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் பாட­சாலை மற்றும் சில அலு­வ­லகங்­களும் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளன.

மெலர் என்ற இந்தப் புயல் கரையைத் தாக்கும் போது 13 அடி உய­ரத்­துக்கு கடல் அலை எழும்பும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும், அதிக மழை கார­ண­மாக சுமார் சில பிர­தே­சங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. மண்­ச­ரிவு குறித்த எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

லூஸன் தீவுக்கு தென்­கி­ழக்குப் பகு­தியில் உள்ள அல்பே மாகா­ணத்தில் மட்டும் சுமார் 6,00,000 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். கடும் மழை கார­ண­மாக அருகிலுள்ள மேயோன் எரி­ம­லைக்கு தாழ்­வான பகு­தி­களில் மண்­ச­ரிவு ஏற்­படும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய அனர்த்த முகா­மைத்­துவ கண்­கா­ணிப்பு அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

அல்பே மாகா­ணத்தில் 12 இலட்சம் மக்கள் வசித்து வரு­கின்­றனர். புயல், வெள்ளம் உள்­ளிட்ட பேரி­ட­ருக்கு தயார்படுத்திக் கொள்­வதில் அல்பே மாகாண நிர்­வாகம் உல­கி­லேயே முத­லிடம் வகிக்­கி­றது.

கடந்த ஆண்டு ஹகுபிட் என்ற மிகப்­பெ­ரிய சூறா­வளி ஏற்­பட்ட போது, ஒருவர் கூட இங்கு பலி­யா­காமல் காப்­பாற்­றப்­பட்­டனர், காரணம் முன்­கூட்­டியே மக்கள் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர்.

அல்பே மாகா­ணத்­துக்கு தெற்கில் உள்ள சர்­சோகன் பகுதியிலிருந்து சுமார் 1,30,000 பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

2013இல் பிலிப்பைன்ஸை ஹையான் என்ற புயல் தாக்கிய போது சுமார் 7,350 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெம்பாக்கம் அருகே காதலியின் உறவினர்கள் தாக்கியதால் காதலனின் தாய் தூக்குபோட்டு சாவு…!!
Next post மடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்..!!