அதிசிறந்த விளையாட்டுத்துறை ஆற்றலுக்கான விருது செரீனாவுக்கு…!!

Read Time:1 Minute, 58 Second

13734serina-1அமெ­ரிக்­காவின் ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்­ரேட்டஸ் சஞ்­சி­கை­யினால் வரு­டாந்தம் தெரிவு செய்­யப்­படும் அதி சிறந்த விளை­யாட்­டுத்­துறை ஆற்றல் வெளிப்­பாட்­டாளர் வரி­சையில் இவ்வருடம் ஐக்­கிய அமெ­ரிக்க டென்னிஸ் வீராங்­கனை செரீனா வில்­லியம்ஸ் தெரி­வா­கி­யுள்ளார்.

விளை­யாட்­டுத்­து­றையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில் இந்தக் கௌர­வத்தைப் பெறும் இரண்­டா­வது வீராங்­கனை செரீனா ஆவார். இதற்கு முன்னர் கிறிஸ் எவர்ட் 1976 இல் இந்தக் கௌர­வத்தைப் பெற்றிருந்தார்.

டென்னிஸ் விளை­யாட்­டுத்­து­றை­யி­லி­ருந்து இந்த விருதை வென்­றெ­டுக்கும் நான்­கா­வது நபர் செரினா ஆவார்.

இதற்கு முன்னர் பில்லி ஜீன் கிங் (1972), க்றிஸ் எவர்ட் (1976), ஆர்த்தர் அஷே (1994 இவர் நிர்­வாகத்து­றைக்­காக இந்த விருதை வென்­றி­ருந்தார்) ஆகியோர் டென் னிஸ் விளை­யாட்­டுத்­து­றை­யி­லி­ருந்து இந்த விருதை வென்­றி­ருந்­தனர்.

சர்­வ­தேச மகளிர் டென்னிஸ் அரங்கில் முதல் நிலை வீராங்­க­னை­யாகத் திகழ்வ ­தாலும் மாபெரும் (கிராண்ட் ஸ்லாம்) டென் னிஸ் போட்­டி­களில் 21 சம்­பியன் பட்­டங்­களை வென்­றுள்­ள­தாலும் இந்த விருதை செரீ­னா­வுக்கு வழங்­கு­வ­தாக ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் க்றிஸ் ஸ்டோன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எட்டி பிடிக்க நினைக்கும் சுட்டி குழந்தை…!!
Next post அருப்புக்கோட்டை அருகே கார் கவிழ்ந்து ஆந்திரா அய்யப்ப பக்தர்கள் 8 பேர் காயம்..!!