திகைக்க வைக்கும் விசித்திர மருத்துவ சிகிச்சைகள்…!!

Read Time:7 Minute, 2 Second

etherapies-500x500உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால், சில ஊர்களில் சில விஷயங்கள் புருவங்களை இமயம் அளவிற்கு உயர்த்தும் படியான விசித்திரங்கள் இருக்கும். ஆனால், ஓர் நாட்டில் மட்டும் அவர்கள் என்ன செய்தாலும், விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கும். வினோத உணவில் இருந்து, உணவு சமைக்கும் முறை, பொருள் என அனைத்திலும் இது தொடரும்.

அது தான் சீனா. சீனர்கள் எது செய்தாலும் சற்று விசித்திரமாகவும், சில சமயங்களில் சற்று கொடூரமாகவும் இருக்கும். இங்கு தான் கருவில் வளரும் சிசுக்கள் கூட சமைத்து உண்ணப்படுகின்றன. உணவு மட்டுமின்றி இவர்களது சில மருத்துவ முறைகள் கூட விசித்திரமாக தான் இருக்கிறது. பச்சை பட்டணியில் தொடங்கி, சிறுநீர் வரை ஏடாகூடமான சில சிகிச்சை முறைகளை கையாள்கிறார்கள் சீனர்கள்.

அவற்றில் சில விசித்திரமான சிகிச்சை முறைகள் பற்றி இனிக் காணலாம்..

குப்பிங் தெரபி

சூடேற்றப்பட்ட கண்ணாடி கப் போன்ற ஒன்றை உடலில் ஆங்காங்கே பொருத்தி செய்யப்படும் சிகிச்சை குப்பிங் தெரபி எனப்படுகிறது. இது சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

சிறுநீர் சிகிச்சை

அதிதைராய்டினால் (hyperthyroid) பிரச்சனைக்கு அவரவர் சிறுநீரை குடிப்பது சீனர்கள் மத்தியில் பரவலான பாரம்பரிய சிகிச்சையாக இருந்து வருகிறது. ஆனால், இது தாக்கம் ஏற்படுத்துவதை விட மிகவும் அபாயமானது என்று ஆய்வாளர்கள் கூறினும் கூட சீனாவில் பலரும் இதை பின்பற்றி வருகிறார்கள்.

எறும்பை உண்ணும் சிகிச்சை

கடந்த 2001-ம் ஆண்டு சீனாவின் Hangzhou எனும் ஹோட்டலில், எறும்பு உண்ணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. எறும்பில் உயர்ரக புரதம் இருப்பதாகவும், இது முதிர்ச்சியை குறைக்க உதவுகிறது என்றும் அவர்கள் கூறினார்.

நெருப்பு சிகிச்சை

இந்த நெருப்பு சிகிச்சையில் நிறைய நன்மைகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். இது இரத்த ஓட்டத்தை தூண்டிவிட பெருமளவு உதவுகிறதாம்.

தேனீ சிகிச்சை

வாத நோய், கீல்வாதம், ஒற்றை தலைவலி, வயிற்று வலி, உயர் இரத்த கொழுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த தேனீ சிகிச்சை பயனளிப்பதாக கூறினும், இந்த சிகிச்சை மேற்கொள்வதால் பெருமளவில் அழற்சி ஏற்படும் என கூறுகிறார்கள். இந்த அழற்சியால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்றும் திகைக்க வைக்கிறார்கள்.

மணல் சிகிச்சை

கடந்த 2013-ம் ஆண்டு “வெஸ்டர்ன் யுஷா தெரபி” எனும் மணல் சிகிச்சை முறை ஒன்று புதியதாக நான்ஜிங் எனும் இடத்தில் அறிமுகப்படுத்தினார்கள். இது, காந்தம், ஒளி போன்ற சிகிச்சை முறைகளின் கலப்பு முறை என்றும் கூறப்பட்டுள்ளது. சிலர் இந்த சிகிச்சையை செய்வதும், கடல் மணலில் படுத்து உருளுவதும் ஒன்று தான் என்றும் கூறுகிறார்கள்.

தாவர சிகிச்சை

கடந்த 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது, ஓர் ஓவியர் பெண்களின் முதுகில் மலர், புற்கள் போன்றவற்றை தாவர ஜூஸ் கொண்டு வரைந்து, இது சருமத்தை புத்துணர்ச்சி அடைய வைக்கும் முறை என்று கூறி வந்தார்.

அடிக்கும் சிகிச்சை

கடந்த 2011-ம் ஆண்டு க்ஸியோ ஹாங்-சீ என்பவர் ஸ்ட்ரெச்சிங் மசில்ஸ் அண்ட் பாடி ஸ்லாப்பிங் (muscle-stretching and body-slapping) என்ற புதிய சிகிச்சை முறையை பற்றி பேசினார். இந்த சிகிச்சை மூலம் நூற்றுக்கணக்கான வியாதிகளுக்கு தீர்வுக் காண முடியும் என்றும் கூறினார். இது பெய்ஜிங், ஷாங்காய், நான்ஜிங் போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது.

பச்ச பட்டாணி சிகிச்சை

கடந்த 2010-ம் ஆண்டு அதிசய மருத்துவர் என்று கூறப்பட்டு வந்த ஷாங் வூ என்பவர் பச்சை பட்டாணி உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இது அனைத்து வகையிலான வியாதிகளுக்கு தீர்வளிக்கும் என்றும் அவர் கூறிவந்தார். ஆனால், கடந்த வருடம் இந்த அதிசிய மருத்துவர், பெருமூளை பிரச்சனைகாக பச்சை பட்டாணி சிகிச்சை மேற்கொண்டு தோல்வியுற்றார்.

மின்சார சிகிச்சை

லை-ஈ (Li-Yi) எனும் நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்சார சிகிச்சை அளித்து குணமடை “மாஸ்டர் 220 வால்ட் எலக்ட்ரிசிட்டி” எனும் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினார். ஓர் உடலியக்க குறைபாடு இருந்த நோயாளிக்கு இந்த சிகிச்சை மூலம், தனது உடலை உணர முடிந்ததுள்ளது. ஆனால், மற்ற மருத்துவர்கள் இதுப்பற்றி இவரிடம் வலுவாக கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

புனித நீர் சிகிச்சை

ஜேஜியாங் எனும் பகுதியில் இருக்கும் சிற்றோடையில் இருந்து புனித நீரை எடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்த சிற்றோடையில் இருந்து எடுக்கப்படும் புனித நீர் நோய்களுக்கு தீர்வளிக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முள்ளிவாய்க்கால் மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!
Next post ஆரோக்கியம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள்..!!