ஆரோக்கியம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள்..!!

Read Time:6 Minute, 51 Second

weight-loose-foods-fitness-679x585-615x530ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால் அப்படி நாம் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று நினைத்து பின்பற்றி வரும் சில பழக்கங்கள் உண்மையில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

ஆம், தினமும் பல முறை குளித்தால், சருமம் பாதிப்பிற்குள்ளாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேப் போல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பாதையை பலவீனமடையச் செய்து விடும் என்றும் சொல்கின்றனர். என்ன ஆச்சரியமாக உள்ளதா? இதுப்போன்று நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிறைய பழக்கங்கள், உண்மையில் ஆரோக்கியமற்றதாக உள்ளது. அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!

இங்கு தமிழ் போல்ட்ஸ்கை நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அதிகம் பின்பற்றுவதைத் தவிர்த்து, வந்தாலேயே உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எப்படி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சோ, அதேப் போல் அளவுக்கு அதிகமான சுத்தம் மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களால், உடலுக்கு கேடு தான் விளையும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். காலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

தண்ணீர் குடிப்பது

ஒரு நாளைக்கு ஒருவர் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் கழிவுகள் தேங்குவது தடுக்கப்படுவதோடு, உடலில் போதிய நீர்ச்சத்தும் இருக்கும். ஆனால் உடலில் டாக்ஸின்கள் தேங்கவே கூடாது என்று 8 டம்ளருக்கு மேல் தண்ணீர் குடித்தால், அதனால் இரத்தத்தில் உள்ள உப்பின் அளவு குறைந்து சிறுநீரகங்கள் சேதமடையும். மேலும் சுத்தமான நீர் என்று பாட்டிலில் விற்கப்படும் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்துங்கள்.

அதிகாலை பழக்கங்கள்

பலரும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில், அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதை விட, மாலையில் செய்வது தான் சிறந்தது என்று கூறுகின்றனர். மேலும் இந்த ஆய்வில் காலையில் உடற்பயிற்சி செய்பவர்களை விட, மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின் உடற்பயிற்சி செய்பவர்களின் உடல் ஃபிட்டாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் மாலையில் நல்ல சுறுசுறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கொழுப்பு குறைவான உணவுகளுக்கு மாறுவது

கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல், உடலின் மெட்டபாலிசத்திற்கு வேண்டிய புரோட்டீன் கிடைக்காமல் போகும். எனவே எப்போதும் கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவாக அவ்வப்போது உட்கொண்டு வாருங்கள்.
ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுப்பது

உடலில் சத்துக்களின் அளவை அதிகரிக்க, ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகளை எடுத்து வருவது நல்லது என்று நினைக்காதீர்கள். உண்மையிலேயே இது மிகவும் மோசமான ஓர் பழக்கம். உங்கள் உடலில் சத்துக்களின் அளவை அதிகரிக்க நினைத்தால், உணவுகளின் மூலம் பெறுங்கள்.
ஜூஸ் டயட் மேற்கொள்வது

எடையைக் குறைக்க நினைப்பவர்களுள் பலரும் ஜூஸ் டயட் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே அது தான் மிகவும் ஆபத்தானது. மேலும் ஜூஸ் டயட்டின் மூலம் உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும். எனவே உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால், ஜூஸ் உடன், சரிவிகித டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள்.

தினமும் குளிப்பது

தினமும் குளிப்பது தவறல்ல. ஆனால் ஒரு நாளைக்கு பலமுறை குளிப்பது தான் தவறான ஓர் பழக்கம். குளிப்பதால் உடலில் சேரும் அழுக்குகளை நீக்கலாம். அதே சமயம் பலமுறை குளித்தால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, விரைவில் சருமத்தில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

சூரியக்கதிர்களில் இருந்து விலகி இருப்பது

வெயில் சருமத்தில் பட்டால், சருமம் கருமையாகிவிடும் என்று பலரும் வெளியே செல்லமாட்டார்கள். ஆனால் சருமத்தில் சூரியக்கதிர்கள் பட வேண்டியது அவசியம். குறிப்பாக அதிகாலையில் சூரியக்கதிர்கள் நம் சருமத்தின் மீது படுமாயின் உடலுக்கு வேண்டிய முக்கியமான சத்தான வைட்டமின் டி கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திகைக்க வைக்கும் விசித்திர மருத்துவ சிகிச்சைகள்…!!
Next post மனிதர்களை போலவே பேசி அசத்தும் காகம்…!!