சட்டவிரோதமாக கரடியை சுட்டுக்கொன்றதாக முன்னாள் அழகுராணி மீது குற்றச்சாட்டு…!!

Read Time:4 Minute, 36 Second

1376238அமெ­ரிக்க முன்னாள் அழ­கு­ரா­ணி­யொ­ருவர் கர­டி­யொன்றை சட்­ட­விரோ­த­மாக சுட்­டுக்­கொன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

25 வய­தான தெரேஸா வெய்ல் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு கான்­சாஸ மாநில அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டவர். கடந்த வருடம் மிஸ் அமெ­ரிக்கா 2014 அழ­கு­ராணி போட்­டி­யிலும் பங்­கு­பற்­றினார்.

அப்­போட்­டியில் ‘டொப் 10’ பட்­டி­யலில் இடம்­பெற்ற அவர், ‘அமெ­ரிக்காஸ் சொய்ஸ்’ எனும் விரு­தையும் சுவீ­க­ரித்தார்.

இப்­போட்­டி­களின் நீச்­ச­லுடை சுற்­றின்­போது, தனது உடலில் பச்சை (டாட்டூ) குத்­தி­யி­ருந்­த­தையும் தெரேஸா வெய்ல் வெளிப்­ப­டுத்­தினார். இதன்­மூலம் அமெ­ரிக்க அழ­கு­ராணி போட்­டி­களில், பச்சை குத்­தி­யி­ ருப்­பதை வெளிப்­ப­டுத்­திய முதல் யுவ­தி­யானார் அவர்.

பொது­வான அழ­கு­ரா­ணிகள் மத்­தி­யி­லி­ருந்து வித்­தி­யா­சமா­னவர் தெரேஸா வெய்ல். அமெ­ரிக்க இரா­ணுவ வீராங்­க­னை­களில் ஒருவர் இவர்.

ஏனைய அழ­கு­ரா­ணிகள் மேக் அப், பெஷன் ஷோ போன்­ற­வற்றில் ஈடு­பாடு காட்டும் நிலையில், துப்­பாக்கிச் சுடுதல், அம்­பெய்தல் போன்­ற­வற்றில் ஈடு­பாடு கொண்­ட­வ­ராக தெரேஸா வெய்ல் விளங்­கு­கிறார்.

மிரு­கங்­களை வேட்­டை­யா­டு­வது அவ­ருக்கு பிடித்­த­மான பொழு­து­போக்கு. சேற்றில் உருண்­டு­பு­ரண்டு பயிற்­சி­செய்­வ­தற்கும் தெரேஸா தயங்­கு­வ­தில்லை.

இந்­நி­லையில், அமெ­ரிக்க தொலைக்­காட்­சி­யொன்றில் ஒளி­பரப்­பாகும் சாகசத் தொட­ரொன்றில் பங்­கு­பற்றும் தெரேஸா வெய்ல், இதற்­கான படப்­பி­டிப்­பின்­போது, கர­டி­யொன்றை சுட்­டுக்­கொன்­ற­தாக அமெ­ரிக்க வழக்குத் தொடு­நர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

கடந்த மே மாதம் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். கர­டி­யொன்றின் மீது அவர் சட்­ட பூர்வமாக முதல் தடவை துப்­பாக் கிப் பிர­யோகம் செய்­த­தா­கவும் ஆனால், பின்னர் அதைக் கொல்வதற்காக இரண்­டா­வது தட­வையும் அதன் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்த போது மற்றொரு கரடி மீது தற்செயலாக தோட்டா பாய்ந்ததாகவும் பின்னர் அதை தான் விலை கொடுத்து வாங்கியதைப் போன்று காட்டிக்கொள்ள அவர் முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மிஸ் அமெரிக்கா அழகுராணி போட்டிகளின்போது தெரேஸா வெய்லின் பெரிய அளவிலான டாட்டூக்கள் ஊடகங்களில் அதிகம் அலசப்பட்டன. அமெரிக்க இராணுவத்தின் சின்னத்தையும் அவர் தனது உடலில் பச்சை குத்தியுள்ளார்.

33 வருடங்களாக இராணுவத்தில் பல் மருத்துவராக பணியாற்றிய தனது தந்தையை கௌரவிப்பதற்காக அந்த சின்னத்தை தான் பச்சை குத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.

தெரேஸா வெய்ல் பச்சை குத்தியிருப்பது குறித்து சிலர் எதிர்மறையாக விமர்சித்தமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், ”ரவுடிகளும் பைக்கில் செல்லும் இளைஞர்களும் தான் பச்சை குத்துகிறார்கள் என வயதான நபர்கள் சிலர் கருதக்கூடும்.

ஆனால். இப்போது உலகம் அப்படியானதாக இல்லை. அதனால் நான் பச்சை குத்திக்கொண்டதை மறைக்க முற்படவில்லை” என கூறியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தேகத்தால் மனைவியின் உயிரைப் பறித்த ஆட்டோ சாரதி.!!
Next post தற்செயலாக தனது உறுப்பு யுவதியின் உடலுக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறியதால் வல்லுறவு வழக்கிலிருந்து கோடீஸ்வர வர்த்தகர் விடுதலை…!!