நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல.. -திவ்யா குமுறல்

Read Time:2 Minute, 21 Second

thoondil-sham_ramya38.jpgநான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல, அப்படி ஒரு இமேஜை உருவாக்க இங்கே சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் திவ்யா. அவர் கைகாட்டுகிற திசை கே.எஸ்.அதியமான் நிற்கிற திசையாக இருப்பதுதான் வில்லங்கம்! தூண்டில் படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது தன்னுடைய லேப்-டாப்பை காணவில்லை என்று குமுறிய திவ்யா, அதற்கான பணத்தை தயாரிப்பாளர் கொடுத்தால்தான் மேக்கப்பே போடுவேன் என்று அறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் திவ்யாவின் அஜாக்கிரதைக்கு தன் பணத்தை அழுதார் தயாரிப்பாளர். ஒருவழியாக படத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியதும் தூண்டில் பட இயக்குனர் அதியமான் செய்த முதல் வேலை, பாடல் காட்சிகளில் எடுக்கப்பட்ட திவ்யாவின் கவர்ச்சி படங்களை நெட்டில் உலவ விட்டதுதான். இதனால்தான் தனக்கு கவர்ச்சி இமேஜ் வந்துவிட்டதென்று கருதுகிறார் திவ்யா. பொல்லாதவன் படத்தில் கூட, கூடுதல் கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டாராம். தீபாவளிக்கு வந்த படங்களில் வெற்றிப்பட லிஸ்டில் பொல்லாதவனுக்கும் இடம் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார் திவ்ஸ். அடுத்தடுத்த படங்களில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். வெறும் கவர்ச்சி காட்டுவார் என்று யாராவது வந்தால், இப்பவே சொல்லிட்டேன்… வராதீங்க! கட் அண் ரைட்டாக பேசுகிற திவ்யா, தானே டப்பிங் பேசுகிற அளவுக்கு தமிழ் பேசுகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை
Next post குண்டு வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு! மூன்று சிறு குழந்தைகளும் படுகாயம்