2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்ட அழகுராணி…!!
நியூஸிலாந்தைச் சேர்ந்த அழகுராணியொருவர் 2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்டுள்ளார்.
23 வயதான நேலா ஸிசர் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் ஏர்த் நியூஸிலாந்து அழகுராணியாக தெரிவானார்.
அவ்வருடம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மிஸ் ஏர்த் அழகுராணி போட்டியிலும் நியூஸிலாந்து சார்பில் அவர் பங்குபற்றினார்.
ஆனால், இறுதிச்சுற்றுப் போட்டிக்கு முன்னர் அவர் உட்கொண்ட உணவு நஞ்சானதால் அப்போட்டிகளிலிருந்து விலகினார்.
ஆனால், தற்போது உணவு உட்கொள்வதில் பல்வேறு சாதனைகளை அவர் படைத்து வருகிறார். மெல்லிய உடற்தோற்றத்துடன் காணப்படும் அவர் நம்ப முடியாத அளவு உணவுகளை உட்கொள்கிறார்.
அண்மையில் 100 மெக்டொனால்ட்ஸ் பர்கர்களை உட்கொண்டு அவர் உலக சாதனை படைக்க முயற்சித்தார். ஜப்பானைச் சேர்ந்த யுகா எனும் 62 பர்கர்களை உட்கொண்டமையே பெண்ணொருவர் பர்கர் உட்கொள்வதில் உலக சாதனையாக உள்ளது.
இச்சாதனையை முறியடிக்கும் முயற்சியில் நேலா இறங்கினார்.
ஆனால், இரு மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்டவுடன் அவர் இம்முயற்சியை கைவிட்டார்.
இந்த சவாலுக்காக தான் விசேட பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் வித்தியாசமான சோஸ் வகைகளை இதற்குப் பயன்படுத்தியதாகவும் நேலா ஸிசர் கூறினார்.
Average Rating