சீனாவில் ரூ.164 கோடி மோசடி: அடையாளத்தை மறைக்க முகமாற்று அறுவை சிகிச்சை – பலே ஆசாமி தாய்லாந்தில் கைது…!!

Read Time:1 Minute, 53 Second

79fae89c-5547-4184-aa69-3014cccab72a_S_secvpfசீனாவில் கடந்த 2013- 2015 ஆண்டுகளுக்கிடையில் போலி நிதி நிறுவனம் நடத்தி 24.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்துவிட்டு நாட்டில் இருந்து தப்பிச்சென்று தாய்லாந்து நாட்டில் முகமாற்று அறுவை சிகிச்சை மூலம் தனது அடையாளத்தை மறைக்க முயன்ற பலே ஆசாமியை சீன போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்நாட்டின் பிரபல நிதி நிறுவன ஆலோசகராக பதவி வகித்துவந்த ஹி என்பவர் சுமார் 160 மில்லியன் யுவான் பணத்தை கையாடல் செய்துவிட்டு சீனாவில் இருந்து தப்பியோடி விட்டார். அவரை கைது செய்வதற்காக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, உல்லாசத்துக்கும், விபசாரத்துக்கும் பேர்போன தாய்லாந்தின் பட்டயா நகரில் மூன்று முகமாற்று அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டு வேறுபட்ட முகத்துடன் உலகை ஏமாற்ற ஹி முயன்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பட்டயாவுக்கு விரைந்துசென்ற போலீசார், அவரை கைது செய்து கொத்தாக அள்ளி, சீனாவுக்கு தூக்கி வந்துள்ளனர்.

தாடையில் உள்ள உப்பிய சதைப்பகுதியை நீக்கி ஒரு பிளாஸ்டிக் சர்ஜரியும், கண்ணின் இமை மடல்களை மாற்றி இருமுறை பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்ட அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடி வெட்டப்போன இவரின் பரிதாப நிலைமையை பாருங்கள்…!!
Next post மெக்சிகோவில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்…!!