வறட்சியால் வாடும் எத்தியோப்பியாவிற்கு உணவிற்காக அமெரிக்கா ரூ.580 கோடி உதவி…!!

Read Time:1 Minute, 50 Second

5959927b-3605-4f6d-8bef-1fe8fcf25e1f_S_secvpfகடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் உணவு தேவைக்காக 580 கோடி ரூபாயை அமெரிக்கா நிதியுதவியாக அறிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு வருகிறது. வறட்சி பாதித்த நாடுகளிலேயே மிக மோசமானதாக தற்போது எத்தியோப்பியா நாடு உள்ளது என்று ஐ.நா. சில வாரங்களுக்கு முன்பு கூறியது.

எத்தியோப்பியாவில் 8.2 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் வரும் 2016-ம் ஆண்டு பாதிக்கப்பட உள்ளதாக ஐ.நா-வின் தகவலறிக்கை கூறி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 90% உணவு தட்டுப்பாடு அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இந்த வறட்சியை சமாளித்து தங்கள் நாட்டில் உள்ள ஒரு கோடி மக்களுக்கு உணவளிப்பதற்காக உலக நாடுகளிடம் இருந்து சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை எத்தியோப்பியா அரசு கோரியுள்ளது.

இந்நிலையில், எத்தியோப்பியாவின் 74 மாவட்டத்தில் உள்ள 26 லட்சம் மக்களுக்காக ஒரு லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. அதற்காக ரூ.580 கோடியை அமெரிக்கா செலவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சான் பெர்னார்டினோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்தார் ஓபாமா…!!
Next post தலைக்கு பதிலாக மூக்குக்குள் மூளை: ஒன்றரை வயது குழந்தை மீது பாசமழையைப் பொழியும் தாய்..!!