அமெரிக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி..!!

Read Time:1 Minute, 30 Second

80801284-282e-4470-bbcf-5ed2d9e0c69e_S_secvpfஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறது. பள்ளிகளில் அத்து மீறி நுழையும் மர்ம மனிதர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி குழந்தைகளையும் ஆசிரியர்களையும் கொன்று குவிக்கின்றனர்.

எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி டெக்காஸ் மாகாணத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் இதற்கான அனுமதியை பள்ளிகள் பெற வேண்டும். யார் யாருக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாக குழு முடிவு செய்து பரிந்துரைக்க வேண்டும்.

அதன்படி பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 8 மணி நேரம் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் துப்பாக்கியை பாதுகாப்புடன் வைத்து கொள்வதற்கான பயிற்சி போன்றவை வழங்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைக்கு பதிலாக மூக்குக்குள் மூளை: ஒன்றரை வயது குழந்தை மீது பாசமழையைப் பொழியும் தாய்..!!
Next post வேலூர் எஸ்.பி. ஆபீசில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு…!!