நெதர்லாந்தில் சாரதி பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பதற்காக பாலியல் சேவை பெறுவதை ஆதரிக்கும் அமைச்சர்கள்…!!

Read Time:3 Minute, 11 Second

13812Untitled-4நெதர்லாந்தில் வாகன சாரதி பயிற்றுநர்கள், பயிற்சி அளிப்பதற்கு பிரதிபலனாக தமது வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை அந்நாட்டு அமைச்சர்கள் இருவர் ஆதரித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தின் சர்ச்சைக்குரிய சட்டமொன்று சாரதி பயிற்சி பெறும் வாடிக்கையாளர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் சாரதி பயிற்சி அளித்து அதற்குப் பிரதிபலனாக அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது சட்டபூர்வமானது எனத் தெரிவிக்கிறது.

இச்சட்டத்துக்குபலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இச்சட்டமானது சட்டவிரோதமான விபசாரம் என நெதர்லாந்தின் கிறிஸ்தவ யூனியன் கட்சியானது விமர்சித்துள்ளது.

இவ்வழக்கத்தை தடைசெய்வதற்காக இச்சட்டத்தை திருத்துவதற்கு அக்கட்சி முயற்சித்தபோதிலும் நாடாளுமன்றத்தில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
நெதர்லாந்தில் விபசாரம் சட்டபூர்வமானதாக உள்ளது.

பாலியல் தொழிலாளர்கள் தமது வருமானத்துக்கு ஏற்பட அரசுக்கு வரிசெலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தின் கிறிஸ்தவ யூனியன் கட்சியைச் சேர்ந்த ஜேர்ட் ஜேன் சேஜர்ஸ் இது தொடர்பாக கூறுகையில், “சாரதி பயிற்சி பெறுபவர்களிடம் பாலியல் தொழிலுக்கான அனுமதிப்பத்திரம் இருக்க மாட்டாது. வரி நோக்கங்களுக்காக, இத்தகைய பாலியல் சேவைகள் குறித்த விபரம் வெளிப்படுத்தப்படப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், நெதர்லாந்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் தற்போதைய உட்கட்டமைப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சருமான மெலனி ஷுல்ட்ஸ் வான் ஹேகன் மற்றும் நெதர்லாந்து நீதியமைச்சர் ஆர்ட் வான் டேர் ஸ்டேவுர் ஆகியோர் மேற்படி சட்டத்தை ஆதரித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“இது வருமானத்துக்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதல்ல, சாரதி பயிற்சி அளிப்பது தொடர்பானது” என கடிதமொன்றில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

“சாரதி பயிற்சிக்காக பாலியல் சேவை மூலம் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால், பணத்துக்காக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது விபசாரமாகும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்லாந்து பஸ் விபத்தில் சுற்றுலாப் பயணிகள் 13 பேர் பலி: போலீஸ் தகவல்..!!
Next post மகனின் தலைமயிர் சிகையலங்காரம் பிடிக்காததால் மனைவி, தாயார், 6 பிள்ளைகளை கொன்ற நபர்…!!