குழந்தையின் பாஸ்போர்ட்டில் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு அபராதம்…!!

Read Time:1 Minute, 40 Second

b957f52d-b5f7-40ed-a336-e7b3242904b9_S_secvpfஇங்கிலாந்தில் குழந்தையின் பெயரால் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்து அந்த குழந்தையின் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு துபாய் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

லாகூர் நகரில் இருந்துவந்த அப்ஷான் சித்திக்கி என்ற அந்தப் பெண் துபாய் வந்திறங்கியதும் விமான நிலையத்தில் இருந்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தபோது அதில் சிறுகுழந்தையின் பெயரும் புகைப்படமும் இருந்ததையும், அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்டதையும் கண்டு திடுக்கிட்டனர். அவரை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்ட அதிகாரிகள், பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பினர்.

அவரிடம் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உரிய பாஸ்போர்ட் இருக்கிறதா? என்பதைக்கூட ஆய்வு செய்யாத பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏலைன்ஸ் நிறுவனத்துக்கு 1,361 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுத்த பெண்…!!
Next post மீனம்பாக்கத்தில் விமான பணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!