வெள்ளைத் திமிங்கிலம் உயிரிழப்பு நீரியல் பூங்காவுக்கு ஒருநாள் விடுமுறை..!!

Read Time:1 Minute, 47 Second

13852_42அமெரிக்காவிலுள்ள நீரியல் பூங்காவொன்றில் வெள்ளைத் திமிங்கிலமொன்று இறந்ததால் மேற்படி பூங்காவுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள சான் அன்டானியோ நீரியல் பூங்காவில் இந்த பெண் திமிங்கிலம் வசித்தது. 18 வயதான இந்த திமிங்கிலத்துக்கு “உன்னா” எனப் பெயரிடப்பட்டிருந்தது.

இந்த வெள்ளைத் திமிங்கிலத்தைப் பார்வையிடுவதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் மேற்படி பூங்காவுக்குச் சென்றுவந்தனர். அதற்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர்.

50 வயதுவரை வாழக்கூடிய இனத்தைச் சேர்ந்த இந்த வெள்ளைத் திமிங்கிலத்துக்கு சிறுநீர்ப்பை தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த செப்டெம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், 18 வருட வயதான இத்திமிங்கிலம் நேற்றுமுன்தினம் இறந்தது. அதையடுத்து நேற்று முன்தினம் இப்பூங்காவின் திமிங்கிலக் கண்காட்சிகள் நிறுத்தப்பட்டன.

இத்திமிங்கிலம் உயிரிழந்தமையால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப் பொருள், அஸ்பிரின் எனக் கூறி நாய் உணவை விற்பனை செய்த யுவதி கைது…!!
Next post இஸ்தான்புல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு: பெண் பலி…!!