முதியவர்களிடம் பணம் வசூலித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி…!!

Read Time:5 Minute, 42 Second

adaea043-ba9b-4254-a7fd-7b0c619124d5_S_secvpfதமிழக அரசு சார்பில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கு உதவித்தொகையாக தகுதி வாய்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற்று வந்த முதியவர்கள் பலருக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் முறையாக ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்து, ஆதார் எண் வழங்கினால் தான் உதவித்தொகை கிடைக்கும் என சொல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து உதவித்தொகை பெற்றுவந்த பலரும் மாவட்ட கருவூலத்தில் மீண்டும் பதிவை புதுப்பித்து வருகிறார்கள். இருப்பினும் ஏற்கனவே பல்வேறு உதவித்தொகை பெற்று வந்தவர்களுக்கு ரத்தானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியில் கடந்த 15 நாட்களாக 50 வயது மதிக்கத்தக்க ஒருநபர் டிப்டாப் உடை அணிந்து தன்னை வருவாய்த்துறை ஆய்வாளர் என்றும், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருவதாக அப்பகுதி முதியவர்களிடம் தெரிவித்துள்ளார்.

கையில் குறிப்பெழுதும் நோட்டு ஒன்றை வைத்து கொண்டு அப்பகுதியில் முதியோர் உதவித்தொகை பெற்று வரும் முதியவர்களை தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்தும், ஆதார் அட்டையை பெற்றும் குறிப்பெழுதினார். அப்போது அவர்களிடம் உங்கள் வீட்டில் எத்தனை பேர்? ஆண் வாரிசுகள் உள்ளனரா? என்றும், வசிப்பது சொந்த வீட்டிலா? என்றும் விசாரித்தார்.

அதன் பின்னர் முதியவர்களிடம், ‘‘நீங்கள் அரசின் உதவித்தொகை மாதந்தோறும் பெறுவதற்கு தகுதி இல்லை. உதவித் தொகையை தொடர்ந்து பெற்று வரவேண்டும் என்றால் ரூ.1,000 லஞ்சம் தரவேண்டும் என்றும், பணத்தை பெற்றவுடன் அந்த முதியவர்களிடம் பணம் கொடுத்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன் என சத்தியமும் வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

மிகவும் ஏழ்மையில் உள்ளவர்கள் அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே போவோம்! என்று கூறினால் கண்டிப்பாக ரூ.1,000 தந்தே ஆக வேண்டும். இல்லையேல் உதவித்தொகையை ரத்து செய்து விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார். முதியவர்களிடம் பணம் வசூல் செய்து விட்டு ‘சத்தியம்‘ பெறும் விஷயம் அப்பகுதி இளைஞர்களுக்கு தெரியவந்தது. அவர்கள், அந்த ஆசாமி உண்மையில் அரசு ஊழியர்தானா? அல்லது மோசடி பேர் வழியா? என அறிய திட்டமிட்டனர்.

நேற்று பிற்பகல் வாய்க்கால் பட்டறை பகுதிக்கு பஸ்சில் வந்து அதே நபர் இறங்கி அங்குள்ள முதியவர்களிடம் வழக்கம் போல விசாரணையை தொடங்கி பணம் வசூலிக்க தொடங்கினார். அப்போது, அவரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து நீ யார்? என்பதை சொல் என கேட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறிய அந்த ஆசாமி சுதாரித்து கொண்டு, ‘‘நான் வருவாய் ஆய்வாளர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறேன்‘‘ என்றார்.

பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்த போது அதுபோல ஒரு நபர் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த டிப்டாப் ஆசாமியை சூழ்ந்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்த தகவல் வீராணம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். போலீசாரிடம் மோசடி ஆசாமியை ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சேகர் (வயது50), சன்னியாசிக்குண்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஏற்காடு யூனியன் கீரைக்காடு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்ததாகவும், தற்போது கடந்த 6 மாதமாக அவர் வேலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வேலை இல்லாத விரக்தியில், வருவாய்த்துறை பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்ததால் முதியவர்களிடம் பணம் வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. 10க்கும் மேற்பட்ட முதியவர்களிடம் தலா ரூ.1,000 வரை வசூலித்துள்ளார். கைதான சேகரை போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியாவில் பயங்கர தாக்குதலுக்கு சதி: 2 தீவிரவாதிகள் கைது…!!
Next post கடலூர் அருகே சிறுத்தை புலி பீதியால் வீட்டை காலி செய்த மக்கள்…!!