அரசின் அடக்குமுறை எதிரொலி மலேசியாவை விட்டு வெளியேற விரும்பும் தமிழர்கள்

Read Time:1 Minute, 25 Second

animated-flag-malaysia.gifமலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பான்மையினர் தமிழர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சம உரிமை கோரி இந்தியர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க மலேசிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில், மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடியேறுவதற்காக விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்து உள்ளது. வழக்கமாக, ஆஸ்திரேலிய குடியேற்றத்துக்காக அனுமதி கோருபவர்களில் 15 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும், போராட்டத்துக்குப்பின் இது 3 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் கோலாலம்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் இயக்குனர் லூயிஸ் லவ்ஸ்டிராண்ட் தெரிவித்தார். குறிப்பாக வக்கீல்கள், டாக்டர்கள் மற்றும் கம்ப்ïட்டர் என்ஜினீயர்களிடம் இருந்து அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப இனி செல்போன் போதும்
Next post கிளிண்டன் மனைவி ஹிலாரி அலுவலகத்தில் புகுந்த மனித வெடிகுண்டு