கடும் பனிமூட்டம்: கோவையில் தரை இறங்க முடியாததால் கொச்சிக்கு திரும்பி சென்ற விமானம்…!!

Read Time:1 Minute, 15 Second

adf975fa-14c1-49d9-9613-a18361a63c5e_S_secvpfகோவையில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கடுங் குளிர் நிலவுகிறது.

சென்னையில் இருந்து கோவைக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் விமானம் இன்று காலை 7.20 மணிக்கு கோவை வந்தது. அந்த நேரத்தில் பனி மூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. எனவே கோவை விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானம் கோவையில் தரை இறங்க அனுமதிக்கவில்லை. கொச்சி செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனால் தனியார் விமானம் கொச்சி சென்று தரை இறங்கியது.

கோவையில் வானிலை சீரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காலை 9.30 மணிக்கு தனியார் விமானம் கொச்சியில் இருந்து புறப்பட்டு 10 மணி அளவில் கோவையில் தரை இறங்கியது. அதன் பின்னர் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். 3 மணி நேர தாமதத்தால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடும் வன்முறை வெறியாட்டங்களின் இடையே இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!!
Next post 17 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகளை கைது செய்யாததால் உ.பி. கிராமத்தில் பதற்றம் நீடிப்பு..!!