இந்த வார ராசிபலன் (30.11.07 முதல் 06.12.07 வரை)

Read Time:13 Minute, 5 Second

astrology_ani1.gif1-mesam-1.gifமேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது:
தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். எந்த வேலையைச் செய்தாலும் கடின உழைப்பின் மூலம் தான் வெற்றியை பெற முடியும். யாருக்கும் உதவிகள் செய்யாதீர்கள். உறவினர்களிடம் சிறு கருத்து வேறுபாடு இருக்கும்.
பெண்களுக்கு: கணவரிடத்தில் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அனுசரித்து செல்ல வேண்டும். உறவினர்களால் தொல்லை தான். குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் அனைத்து வேலைகளும் திட்டமிட்டவாறு சரியான நேரத்தில் முடியும். மேலதிகாரிகள் தங்களின் திறமைகளை பாராட்டுவார்கள். சக ஊழியர்களிடம் சற்று கவனம் தேவை.

2-resabam-2.gifரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)
பொது:
செய்யும் வேலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்ப்புகள் பலமாக இருப்பதால் எதிலும் கவனம் தேவை.
பெண்களுக்கு: தேவையில்லாமல் யாரிடமும் பேச வேண்டாம். கணவரிடத்தில் சண்டை போடாதீர்கள். சற்று குழப்பமான நிலை தென்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
வேலை பார்ப்போருக்கு: பணி செய்யுமிடத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். கடினமாக செய்கின்ற வேலைகளில் சிறிய குறைகள் உண்டாகும். ஊதிய உயர்வு கிடைத்தாலும் நிம்மதி குறைவே.

3-midunam-3.gifமிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொது:
எந்த தடை வந்தாலும் தகர்த்தெறிந்து வெற்றி வாகை சூடுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களில் பலத்த போட்டிகள் ஏற்பட்டாலும் கடைசியில் வெற்றி காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
பெண்களுக்கு: அக்கம் பக்கத்து வீட்டாரிடம் சற்று கவனம் தேவை. எந்தச் செயலை செய்தாலும் நன்றாக சிந்தித்து செய்யவும். பிள்ளைகளால் தங்களுக்கு பெருமை கிடைக்கும்.
வேலை பார்ப்போருக்கு: வேலைகள் செய்யும் போது மேலதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு செய்யவும். சிலருக்கு விரும்பிய இடத்தில் மாற்றம் கிடைத்து செல்வர். ஊதிய உயர்வு கிடைக்கும்.

4-kadagam-4.gifகடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பொது:
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
பெண்களுக்கு: கன்னிப் பெண்களுக்கு மங்கல காரியம் நடக்கும். பெரியவர்களின் துணையுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவருடன் மகிழ்ச்சி தாண்டவமாடும். அனைவரிடமும் அமைதியாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் மேலதிகாரிகள் தங்களுக்கு தேடிவந்து உதவி செய்வார்கள். நீங்களே எதிர்பாராமல் வேலையில் அமைதியான சூழல் உருவாகும். இதுவரை இருந்த சிக்கல்கள் அகலும்.

5-simmam-5.gifசிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொது:
உடல் நலத்தில் மிகுந்த கவனத்துடன் இருங்கள். பொருளாதாரத்தில் நிறைவான நிலை இருந்தாலும், நீங்கள் திட்டமிட்ட வேலைகளில் சற்று தாமதம் ஏற்படும். உறவினர்கள், உடன்பிறந்தவர்களிடமிருந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
பெண்களுக்கு: இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடந்து உங்களை சந்தோஷப் படுத்தும். தங்களுக்கு தேவையான உடை, நகைகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும்.
வேலை பார்ப்போருக்கு: அலுவலக வேலைகளில் சற்று கவனம் தேவை. உடன் வேலை பார்ப்பவர்களை நம்பி எதையும் ஒப்படைக்காதீர்கள். மேலதிகாரிகளால் எந்த தொந்தரவும் இல்லை.

6-kanni-6.gifகன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொது:
திருப்திகரமான வாரமிது. நீங்கள் நினைத்தது நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு கிடைக்கும். நண்பர்களால் தொல்லை தான். உடல் நலத்தில் எந்த குறையும் இருக்காது. மனம் ஆன்மீகத்தில் நாட்டத்துடன் செல்லும்.
பெண்களுக்கு: பெண்கள் தாங்கள் திட்டமிட்ட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வதன் மூலம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் எந்த தொந்தரவும் இராது.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் கடுமையாக உழைக்க வேண்டிவரும். உடன் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு உதவுவார்கள்.

7-thulam-7.gifதுலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
பொது:
மகிழ்ச்சியான இந்த வாரத்தில் பணவரவு தங்கள் பையை நிரப்பும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள்.
பெண்களுக்கு: இல்லறத்தில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். வீண் பேச்சுகளை பேசி வம்புச் சண்டை போடாதீர்கள். கணவரிடம் மகிழ்ச்சியில் மனம் திறந்து பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
வேலை பார்ப்போருக்கு: பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடுவதால் கடின பிரயாசை செய்ய வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

8-viruchagam-8.gifவிருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)
பொது:
வரவுக்கு ஏற்ற செலவுகள் செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பு அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமையால் கண்டு மதிப்பும், மரியாதையும் உயரும்.
பெண்களுக்கு: தேவைக்கேற்ற பணவரவு கிடைப்பதால் சந்தோஷம் அதிகரிக்கும். சொந்தக்காரர்களிடம்
இருந்த மனக்கசப்பு நீங்கி அன்பு கூடும். கணவரின் பாச மழையில் குதூகலத்துடன் இருப்பீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: பணிச்சுமை அதிகமானாலும், அதை சிறப்பாக செய்து முடிக்கும் திறமையை பெறுவீர்கள். உங்கள் வேலைகளை உடன் பணி புரிபவர்கள் பகிர்ந்து கொண்டு செய்வதால் சிரமமில்லை. ஊதிய உயர்வு கிடைக்கும்.

9-dhanusu-9.gifதனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொது:
வரவுகள் அதிகமாக இருப்பதால் பணவரவு சீராக இருக்கும். உடன்பிறந்தவர்களிடத்தில் இருந்த பிரச்சனை தீரும். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கைகள் போய்விடும். ஆன்மீகத்தில் மனம் செல்லும்.
பெண்களுக்கு: கணவரிடம் எதிர்பார்த்த பாசத்தையும், அன்பையும் பெறுவீர்கள். உறவினர்களிடத்தில் சற்று கவனத்துடன் நடந்து கொள்ளவும். தேவையில்லாமல் யாரிடமும் பேசாதீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: உத்தியோகத்தில் கொடுத்த வேலையை சரியாக முடித்து நல்ல பெயர் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு ஆளாவீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறுவீர்கள்.

10-magaram-10.gifமகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொது:
உறுதியோடும், உற்சாகத்தோடும் செயல்படுவீர்கள். செயல்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வர். அவசர காரியங்களில் கவனம் தேவை.
பெண்களுக்கு: வரவுகளில் தாமதம் ஆகலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும். புதியவர்களால் சில ஆதாயங்கள் கிடைக்கும். சக ஊழியர்களன் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

11-kumbam-11.gifகும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பொது:
கடுமையாக உழைப்பீர்கள். முக்கியப் பணிகளில் கவனம் தேவை. இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்படும். உறவினர்களால் நல்லது நடக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடந்தேறும்.
பெண்களுக்கு: கணவருடன் ஒற்றுமை பலப்படும். கடன் தொல்லை அடையும். மன நிம்மதி அதிகரிக்கும். சமையல் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை.
வேலை பார்ப்போருக்கு: வேலைகளில் சிறு சிறு தடை ஏற்படும். வருவாய் தடையின்றி வரும். பதவி உயர்வு, இடமாற்றம் விரும்பியபடி அமையும். சக ஊழியர்களிடம் கவனம் தேவை.

12-meenam-12.gifமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பொது:
கவலையின்றி செயல்படுவீர்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பச் சூழல் சிறப்பாக இருக்கும். மன நிம்மதி அதிகரிக்கும். அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் கடன் தொல்லை ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சகோதர வகையில் சுப நிகழ்ச்சிகளுக்கு செலவிட நேரிடும். அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: உயரதிகாரிகளின் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். சக ஊழியர்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பார்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு : தூதராக இருப்பதில் பெருமை: கமல் உருக்கம்
Next post அமெரிக்கா: ஹிலாரி ஒரு லெஸ்பியன்? அமெரிக்காவில் பரபரப்பு