இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்க விரும்பும் ஆபாசப் பட நடிகர்…!!

Read Time:1 Minute, 45 Second

138962073இத்­தா­லியைச் சேர்ந்த ஆபா­சப்­பட நடிகர் ஒருவர் அந்­நாட்­டி­லுள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்­பிப்­ப­தற்கு முன்­வந்­துள்ளார்.

ரொக்கோ சிப­ரெடி எனும் இந்த நடிகர், இத்­தா­லி­யி­லுள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்பி­ப்­பது அவ­சியம் என வலி­யு­றுத்தும் மனு­வொன்றை அந்­நாட்டு அர­சுக்கு அனுப்­பு­வ­தற்­காக கையெ­ழுத்து வேட்­டை­யொன்றை ஆரம்­பித்­துள்ளார்.

இந்­நி­லையில் பாட­சா­லையில் மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கினால் தானே பாலியல் கல்வி ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­று­வ­தற்கு விரும்­பு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

“எனது பெய­ரையும் அனு­ப­வத்­தையும் இத்­திட்­டத்­துக்கு நான் பயன்­ப­டுத்தத் தயா­ரா­க­வுள்ளேன்.

இத்­தா­லி­யி­லுள்ள பாட­சா­லை­களுக்கு நேர­டி­யாகச் சென்று இத்­திட்­டத்தை நான் ஊக்­கு­விப்பேன்” என 51 வய­தான ரெக்கோ தெரி­வித்­துள்ளார்.

இத்­தா­லிய கல்வி அமைச்­ச­ரான ஸ்டெஃபா­னி­யா­வுக்கு அனுப்பப்படவுள்ள மேற்படி மனுவில் நேற்று முன்தினம் வரை 21,600 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி சரோஜினி நகர் ரெயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிப்பு..!!
Next post சிரியாவில் ராணுவம் ஏவுகணை வீச்சில் கிளர்ச்சியாளர் படை தலைவர் பலி…!!