அமெரிக்காவில் கிளிண்டன் மனைவியின் அலுவலகத்திற்குள் புகுந்த மனித வெடிகுண்டு; 5 மணி நேரத்திற்குப் பின் போலீசிடம் சரண் அடைந்தான்

Read Time:4 Minute, 45 Second

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியின் தேர்தல் அலுவலகத்திற்குள் ஒரு மர்ம மனிதன் புகுந்தான். அவன் 5 பேரை பணயக் கைதியாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கட்சித் தொண்டர்களிடையே ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது தேர்தல் அலுவலகம் ரோசெஸ்டர் நகரில் உள்ளது. நேற்று இந்த அலுவலகத்தில் திடீரென்று ஒரு மர்ம மனிதன் புகுந்தான். அவன் தனது இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்டைக் கட்டியிருப்பதாகக் கூறி சட்டையைத் திறந்து காண்பித்தான். இதைக் பார்த்த கட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவன், உடனடியாக `என்னை ஹிலாரியுடன் பேச அனுமதியுங்கள். இல்லாவிட்டால் இந்த அலுவலகத்தைத் தகர்ப்பேன்’ என்று மிரட்டல் விடுத்தான். மேலும் அங்கிருந்த 3 பெண்கள், ஒரு 6 மாதக் குழந்தை உள்பட 5 பேரை அவன் பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்டான். முதலில் அவன், கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணை விடுவித்தான். அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தாள். இதனைத் தொடர்ந்து ஹிலாரியின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களும், ஆயுதம் தாங்கிய போலீசாரும் விரைந்தனர். அந்தப் பகுதி முழுவதையும் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்கள், பள்ளிக் கூடங்களிலிருந்து அனைவரும் உடடினயாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் மனித வெடிகுண்டாக வந்தவனிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மேலும் இரண்டு பெண்களை அவன் விடுவித்தான். அவர்கள் கண்ணீருடன் வெளியே ஓடி வந்தார்கள்.

சரண் அடைந்தான்

இதன் பிறகு சில மணி நேரம் வெடிகுண்டு மனிதனுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே போலீசார் அதிரடியாக அவன் இருந்த அறைக்குள் புகுந்தனர். அப்போது போலீசாரிடம் அந்த மர்ம மனிதன் சரணடைந்தான். அவனிடம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவனிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனங்கள் செல்வதற்காக சாலையில் பதிக்கும் சில தகடுகளை பயன்படுத்தி அதை அவன் வெடிகுண்டுபோல் இடுப்பில் கட்டியிருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு மனிதனின் 5 மணி நேர மிரட்டல் நாடகம் முடிவுக்கு வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மர்ம மனிதனின் பெயர்லீ எல்சன்பெர்க் (47) என்பதும், அவன் மனநிலை பாதிப்பு காரணமாக முன்பு சிகிச்சை பெற்றவன் என்பதும் தெரிய வந்தது.

ஹிலாரி நன்றி

நல்லவேளையாக இந்தச் சம்பவம் நடந்தபோது ஹிலாரி தனது அலுவலகத்தில் இல்லை. அவர் ஹவெர்ஜீனியா மாகாணத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்தார்.

பணயக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஹிலாரி கிளிண்டன் இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. எங்களின் ஊழியர்கள் பற்றிய கவலை தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை. நிலைமையை சமாளித்து அனைவரையும் பத்திரமாக மீட்ட நிïஹாம்ப்சையர் போலீசார் பாராட்டுக்குரியவர்கள் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை கைதிகளை கடத்த முயன்ற வழக்கு * 16 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
Next post விஜய் மீதான வழக்கு ஒத்திவைப்பு