விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் தகவல்…!!

Read Time:2 Minute, 50 Second

102a279f-be66-4b90-80f2-3bcd0680ef62_S_secvpfவிண் கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணில் சுற்றித்திரியும் விண் கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதைவிட தொலை தூரத்தில் உள்ள வால் நட்சத்திரங்களால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் குழு இந்த தகவலை அறிவித்துள்ளது.

சூரிய குடும்பத்தின் தொலை தூர கிரகங்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியுன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையை ஏராளமான வால் நட்சத்திரங்கள் வழி மறிக்கின்றன. இது கடந்த 20 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘சென்டார்ஸ்’ (விண்மீன் கூட்டம்) என்றழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரங்கள் 50 முதல் 100 கி.மீட்டருக்கு மேல் குறுக்களவு கொண்டது. இது எப்போதாவது புவியிர்ப்பு மண்டலத்துக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வால் நடசத்திரத்தின் எடையும், புவியிர்ப்பு மண்டலத்தை கடக்கும் அனைத்து விண்கற்களின் ஒட்டு மொத்த எடைக்கு சமமானதாக இருக்கும்.

அவை சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே வரும் போது பல துண்டுகளாக பிரிந்து தூசியாக மாறலாம். ஆனால் அவற்றில் இருந்து வெளியேறும் விண்கல் துகள்கள் பூமியை தாக்காமல் இருக்காது.

இதனால் விண்கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்மீன் கூட்டத்து வால் நட்சத்திரம் விழுந்த தால் டைனோசர் இனம் அழிந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எனவே பூமியை பாதுகாக்கும் முயற்சியில் அருகேயுள்ள விண் கற்களில் மட்டுமின்றி, தொலை தூரத்திலுள்ள வால் நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்தான்புல் ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய துருக்கி அதிபர்..!!
Next post தென்னாப்பிரிக்காவில் பரபரபரப்பு: வாலிபரை காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு – உயிரணுவுடன் தப்பிய 3 பெண்கள் எங்கே…?