பாகிஸ்தானை தாக்கிய 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தால் 89 பேர் காயம்…!!

Read Time:1 Minute, 44 Second

ef163b6b-5ee1-4147-8061-b2f0f757b873_S_secvpfபாகிஸ்தானை நேற்று பின்னிரவு தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 89 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஹிந்து தில்குஷ் மலைப்பகுதி அருகே பூமியின் 203 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளையும் பதம்பார்த்தது.

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான், லாகூர், நான்கானாசாஹிப், பைஸ்லாபாத், ஷேக்குபுரா, குஜராத், முல்தான், சிசால்கோட், ஜீலம், சுவாத் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட மண்சரிவால் கோஹிஸ்தான் மாநிலத்தில் உள்ள கராகுரம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஏற்பட்ட சிறிய விபத்துகளால் பெஷாவர் நகரில் 59 பேரும், சுவாத் பள்ளத்தாக்கு பகுதியில் 17 பேரும், புனேர் மாவட்டத்தில் 12 பேரும் காயமடைந்ததாகவும் கைபர் மற்றும் ஹயாத்தாபாத் அரசு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்குன்றத்தில் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை…!!
Next post மியான்மர் மரகதச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர் – ஆறு பிணங்கள் மீட்பு..!!