மியான்மர் மரகதச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர் – ஆறு பிணங்கள் மீட்பு..!!

Read Time:1 Minute, 25 Second

c6d8d827-7395-42a8-8ff1-cfb375aca17f_S_secvpfமியான்மர் நாட்டில் உள்ள மரகதச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர்.

வடக்கு மியான்மரில் இந்தியா-சீன எல்லையோரப் பகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் உள்ள ஹ்பாகன்ட் பகுதியில் உள்ள மரகதச் சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் ஏராளமான தொழிலாளர்கள் மரகதக் கற்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். பிற்பகலில் அந்த சுரங்கத்தின் ஒருபகுதியில் மண்சரிந்து அருவியாக கொட்டியது.

இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஐம்பதுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிருடன் புதைந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் இன்று காலைவரை ஆறு பிணங்களை மீட்டுள்ளனர். மீதிபேரை தேடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.

மலைபாங்கான பிரதேசமான கச்சின் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 114 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானை தாக்கிய 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தால் 89 பேர் காயம்…!!
Next post அருப்புக்கோட்டை அருகே என்ஜினீயர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு…!!