புகை பிடித்தால் தலை வழுக்கையாகும்

Read Time:2 Minute, 32 Second

புகைப்பிடிப்பதால், நுரையீரல் புற்றுநோய், ஆண்மைக்குறைவு, இதய நோய் மட்டுமல்லாமல், தலை வழுக்கையும் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில், இது தெரியவந்துள்ளது. புகைப்பிடிப்பதால், முன்கூட்டியே வழுக்கை ஏற்படும் வகையில், முடி கொட்டுவது துõண்டப்படுகிறது. புகைப்பிடிப்பதால், முடி வளர்வதற்கான நுண்ணிய மரபணுக் கள் பாதிக்கப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களை மட்டுமின்றி, குறைவாக புகைப்பவர்களுக்கும் வழுக்கை ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன.விஞ்ஞானிகள், 40 வயதுக்கு மேற்பட்ட தைவானை சேர்ந்த 700 பேரிடம் நடத்திய ஆய்வில் இது உறுதிபடுத்தப்பட்டது. இவர்கள், அனைவரது உடல் எடை, உயரம் குறித்த விவரங்கள் குறிக்கப்பட்டது. அதே போல, ரத்தமும் பரிசோதிக்கப்பட்டது. சாதாரணமானவர்களை விட புகைப்பிடிப்போருக்கு வயாதாகும் போது தலையில், முடிகொட்டி வழுக்கை விழுவது அதிகமாகிறது.அதிகளவில், புகைப்பிடிப்பவர்களுக்கு, வயதாகும் போது உறுதியாக தலைவழுக்கை ஏற்படும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புகைப்பிடிப்பதற்கும் தலைவழுக்கை ஏற்படுவதற்கும் நேரடி தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரம்பரையாக தலை வழுக்கை இல்லாதோருக்கும், புகைப்பிடிப்பதால் தலை வழுக்கை ஏற்படும்.பரம்பரையாக தலைவழுக்கை இருப்பவர்களை விட, ஒரு நாளுக்கு 20க்கு அதிகமாக சிகரெட் புகைப்பவர்களுக்கு இருமடங்கு முன் கூட்டியே தலை வழுக்கை ஏற்படும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை பாதியில் கைவிடுவோருக்கும் முன்கூட்டியே முடி கொட்டும். ஆனால், பாதிப்பு குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘தசாவதாரம்’ ஆடியோ விழாவில் ஜாக்கிசான்
Next post ரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு