மகளுக்கு செக்ஸ் கொடுமை: கொடூர தந்தை கைது

Read Time:3 Minute, 39 Second

சொந்த தந்தையால் செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட முன்னாள் “மிஸ் ஜம்மு’ பற்றிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரரான அந்த காம கொடூரன் கைது செய்யப்பட்டு விட்டான். காஷ்மீரில் அழகி பட்டம் பெறுபவர்கள் செக்ஸ் கொடுமைக்கு உள்ளாவது புதிதல்ல. 2004ம் ஆண்டு “மிஸ் ஜம்மு’ என்ற அழகி பட்டம் பெற்ற அனாரா குப்தா என்பவரின் புளூ பிலிம் “சிடி’ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அனாராவை கைது செய்தனர். அந்த புளூ பிலிம் “சிடி’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் இடம் பெற்று இருப்பது அனாரா இல்லை என்பது பின்னரே தெரிய வந்தது. இந்த சம்பவம் பற்றி இந்தி திரைப்படம் ஒன்று “மிஸ் அனாரா’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், சிவசேனா எதிர்ப்பு காரணமாக ஜம்மு நகரில் வெளியாகவில்லை.இதே போன்று, செக்ஸ் கொடுமைக்கு ஆளான மற்றொரு அழகி பற்றிய விவரம் வருமாறு:

“மிஸ் ஜம்மு’வாக பட்டம் பெற்ற இளம் பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார். இது குறித்து, அவரது தந்தையான எல்லைப் பாதுகாப்பு படை வீரர் போலீசில் புகார் செய்தார். பின்னர் டில்லி ஆசாமி ஒருவர் தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும் புகார் அளித்தார்.சமீபத்தில், டில்லியில் தங்கியிருந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

கோர்ட்டில் அந்த பெண் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் கூறியதாவது:என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. மாடலிங் தொழிலில் ஈடுபட வேண்டும் என என்னை வற்புறுத்தி எனது தந்தை தான் டில்லிக்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் என்னை தங்க வைத்தார். ஒரு நாள் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். நான் தடுத்தும் முடியவில்லை. தொடர்ந்து என்னிடம் செக்ஸ் உறவு வைத்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஒத்துழைக்க மறுத்தால், நான் விபசார தொழில் புரிவதாக ஊர் முழுவதும் கூறி விடுவதாக மிரட்டினார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால் பொறுத்து இருந்தேன்.சில நாட்களில் எனது உறவினர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்கள் உதவியுடன் எனது தந்தையிடம் இருந்து தப்பித்து, ஒருவரை மணந்து கொண்டேன்.இவ்வாறு அந்த பெண் கூறினார். இது அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. காம கொடூரன் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழகத்தில் உள்ள குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி : ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு விற்க இலக்கு!!
Next post சொந்த மண்ணில் முரளி உலக சாதனை!