புதிய சாதனைகளை படைக்கும் ‘ஸ்டார் வோர்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’…!!

Read Time:2 Minute, 2 Second

1390219ஸ்டார் வோர்ஸ் திரைப்­பட வரி­சையில் புதிய பட­மான “ஸ்டார் வோர்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்” திரைப்­படம் வசூலில் புதிய சாத­னை­களை படைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

கடந்த 18 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வெளி­யான இத்­தி­ரைப்­படம் வட அமெ­ரிக்க பிராந்­தி­யத்தில், அதா­வது அமெ­ரிக்கா, கனடா ஆகிய நாடு­க ளில் மாத்­திரம் 5 நாட்­களில் 30 கோடி டொலர்­களை (சுமார் 4200 கோடி ரூபா) வசூ­லித்­துள்ளது.

இதன் மூலம், திரைப்­ப­டங்­களின் வர­லாற்றில், வட அமெ­ரிக்­காவில் மிக வேக­மாக 30 கோடி டொலர்­களை வசூ­லித்த திரைப்­ப­ட­மா­கி­யுள்­ளது இப்­படம்.

கடந்த ஜூன் மாதம் வெளி­யான ஜூராசிக் வேர்ல்ட் திரைப்­படம் வட அமெ­ரிக்­காவில் 8 நாட்­களில் 30 கோடி டொலர்­களை வசூ­லித்­தி­ருந்­தது. அச்­சா­த­னையை “ஸ்டார் வோர்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்” முறி­ய­டித்­துள்­ளது.

7 ஆவது ஸ்டோர்வோர்ஸ் திரைப்­ப­ட­மான இப்­ப­டத்தில் 73 வய­தான நடிகர் ஹரி சன் போர்ட் மீண்டும் “ஹான் சோலோ” பாத்­தி­ரத்தில் நடித்­துள்ளார். ஜே.ஜே. ஆப்­ரஹாம்ஸ் இப்­ப­டத்தை இயக்­கி­யுள்ளார்.

இப்­படம் அமெ­ரிக்­காவில் மாத்­திரம் 25 கோடி டொலர்­களை வசூ­லித்து மிக வேக­மாக இத்­தொகை வசூ­லித்த பட­மா­கி­யுள்­ளது.

உல­க­ளா­விய ரீதியில் 61 கோடி டொலர்­களை “ஸ்டார் வோர்ஸ்: த ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்” திரைப்­படம் வசூ­லித்­துள்­ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூலித்தொழிலாளியை கரம் பிடித்த பிளஸ்–1 மாணவி தற்கொலை..!!
Next post நத்தார் மரத்தின் சாயலில் ஆடையணிந்த பாடகி பியோன்ஸே…!!