நத்தார் மரத்தின் சாயலில் ஆடையணிந்த பாடகி பியோன்ஸே…!!
அமெரிக்காவின் பிரபல பாடகியான பியோன்ஸே நொவெல்ஸ் இப்பண்டி கைக் காலத்தில் நத்தார் மரம் போன்று ஆடையலங்காரம் செய்துகொண்டு நிகழ் வொன்றில் பங்குபற்றினார்.
சாதாரண கிறிஸ்மஸ் ஆடையாக அல்லாமல், டின் சல், பாபல்ஸ் போன்ற நத்தார் மர அலங்கரிப்பு பொருட்களும் பியோன்ஸில் ஆடையில் இருந்தன.
கடந்த திங்களன்று இரவு நியூயோர்க்கில் நடைபெற்ற வைபவமொன்றில் இந்த ஆடை ஆடையுடன் பியோன்ஸே பங்குபற்றினார்.
34 வயதான பியோன்ஸே நொவெ ல்ஸ், பிரபல பாடகர் ஜே இஸட்டின் மனைவியாவார்.
29 கிரம்மி விருது களை வென்ற பியோன்ஸே நொவெல் ஸின் பாடல்களில் 11 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பெண் இசைத்துறை கலைஞராக போர்ப்ஸ் சஞ்சிகை அவரை தெரிவுசெய்திருந்தது.
லண்டனைத் தளமாகக் கொண்ட ஆடை நிறுவனமான டொப்ஷொப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள பியோன்ஸே நொவெல்ஸ், புதிய வர்த்தகநாமத்தில் நட னம், விளையாட்டு, உடற்பயிற்சிக்கான ஆடைகளை தயாரிப்பதற்கான ஒப்பந்த மொன்றில் அண்மையில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் நத் தார் மரம்போன்று ஆடையலங்காரம் செய்து கொண்டுள்ளார்.
Average Rating