பலராலும் வரவேற்கப்படும் தமிழ் மக்கள் பேரவை… காரணம் யாதோ?? -அரசு…!!

Read Time:6 Minute, 37 Second

timthumbபலராலும் வரவேற்கப்படும் தமிழ் மக்கள் பேரவை…

அரசியல் கட்சி இல்லாமல் தமிழ் மக்களின் நலன்களில் முழுமையாக அக்கறை கொண்டு உழைப்பதற்காக வடமாகாண முதலமைச்சரை இணைத் தலைமையாகக் கொண்ட “தமிழ் மக்கள் பேரவை” இப்போது தமிழ் மக்களின் பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதன் இணைத் தலைவர்களால் அறிவிக்கப்பட்ட கொள்கைகளை மக்கள் ஏற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அரசியல் கட்சி அல்லாமல், தமிழர் தரப்பிற்குள் குரோதங்கள் இல்லாமல், தேசியத்திற்கு விரோதமில்லாமல் மக்களின் நலன் சார்ந்த தேவைகளை பெறுவதற்காகவும், அதற்காக பாடுபடுவதற்காகவும் இது உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பலருடனும் பகிரப்பட்ட கருத்துக்களை இங்கு தருகின்றோம்…

**01. அண்மைக்காலமாக வடமாகாண சபையின் அமர்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது மக்கள் அவதானித்த விடயங்கள் அருவருக்கத் தக்கதாக உள்ளன.

அவைத் தலைவர் ஒருபுறமும், முதல்வரோடு அமைச்சர்கள், உறுப்பினர்கள் இன்னனொருபுறமும் உள்ளமையை அது காட்டுகின்றது.

ஒரே கட்சியில் உள்ளவர்கள் ஒற்றுமையில்லாமல் நடந்து கொள்வதற்காகவா நாம் வாக்களித்தோம் என்றார் மூத்த அரச உத்தியோகத்திர் ஒருவர்.

**02. தமிழரசுக் கட்சி மட்டுமன்றி தமிழ் அமைப்புகள் எல்லாமே தமக்குள்ளே ஓரங்கட்டும் நடவடிக்கைகளை காலம் காலமாக செய்து வருகின்றன.

இதன் வெளிப்பாடே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று வெளி உலகிற்கு கூறிக்கொண்டு தமிழரசுக் கட்சியில் உள்ள சிலர் நடந்து கொள்ளும் முறையும் அவர்களின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.

“இதனை நாம் எத்தனை ஆண்டுகளாக பார்த்து வருகின்றோம்” என்றார் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர்.

**03. “பலவற்றை நாம் காலம் காலமாக இழந்து வருகின்றோம். உயிர்களோடு உரிமையையும் இழந்து நிலபுலங்களையும் இழந்து நிற்கின்றோம். இதற்கான ஒரு தீர்வு பெறுவதற்கே எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

ஆனாலும் எமக்குள் இருக்கும் சுயநலவாதிகளாலும், பேரினவாதிகளாலும் அவை மழுங்கடிக்கப்பட்டன. பல லட்சக் கணக்கான உயிர்களை நாம் இழந்தும் இன்னும் நாம் எதைப் பற்றியும் சிந்திக்காதவர்களாக இருந்துவிட முடியாது” என்றார் பழுத்த அரசியல் ஞானமுள்ள சனசமூக நிலையத்தின் தலைவர் ஒருவர்.

04. “வடமாகாணத்தின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து வடக்கு மாகாணத்திலேயே குடியிருந்து மக்களின் நலன்களில் அக்கறையோடும், எமக்கு கிடைக்க வேண்டியவற்றை பேரினவாத அரசாங்கம் தரமறுப்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லியும் வருகின்றார்.

என்னதான் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்தாலும் வடமாகாண முதல்வருக்குரிய பணிகளை தமிழ் உணர்வோடு செய்து வருவதனை எவரும் மறுக்க முடியாது.

அதேவேளை நாம் வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினர்களாக்கிய எத்தனைபேர் சொந்த இடங்களில் நின்று பணி புரிகின்றார்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரன் மேலானவர்” என்றார் பல்கலைக்கழக மூத்த துறைத் தலைவர் ஒருவர்.

“”05. “தமது சுயநலனக்காகவும், தொழில் பெருக்கத்திற்காகவும் இதுவரை காலமும் மக்களை ஏமாற்றி அரசியலில் நுழைந்த ஒரு சிலரால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டது.

இவர்கள் தமிழ் தேசிய கட்சியோடு இணைந்ததன் நோக்கம், மக்களுக்கு நன்றாகவே தெரியும். செய்திகள்மூலம் மக்களை திசைதிருப்பி மக்களைச் சுயமாக சிந்திக்க விடாது இவர்கள் நடாத்திவரும் நாடகங்களே எமது இனத்தின் முழு அழிவிற்கும் காரணம்.

சுருக்கமாகச் சொன்னால் எம்மினத்தின் ஜனநாயக ஊடக சுதந்திரத்தை விற்றுப் பிழைப்பவர்களாகவே இவர்கள் உள்ளனர். இவர்களோடு ஒப்பிடுகையில் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமை பொருத்தமானதே” என்றார் கல்வி அமைச்சின் பொறுப்புவாய்ந்த பதவியில் உள்ள ஒருவர்.

இவ்வாறான பலரது கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையானவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்பது மக்களுக்காக உழைக்கும் அமைப்பாக இருந்தால் படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரது ஆதரவும் அவர்களுக்கு இருக்கும் என்ற கருத்தும் வெளிப்பட்டது.

இதைவிட கல்விப்புலம் சார்ந்த பலரது ஆதரவும், மதத்தலைவர்கள், வைத்தியகலாநிதிகள், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், அரசார்பற்ற நிறுவனங்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்களின் ஆதரவும் பெருகிவருவதனை அவதானிக்க முடிகின்றது.

“இதற்கு வடகிழக்கிற்கு வெளியே உள்ள தமிழ் மக்களும் பெரும் ஆதரவை வழங்கவுள்ளனர்” என்று கூறினார் மலையகத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை…!!
Next post பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 54) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!