பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை…!!

Read Time:1 Minute, 39 Second

Heavy-traffic-Colomboபொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பஸ் மற்றும் ரயில்களின் ஊடாக பயணிகள் போக்குவரத்தை முன்னெடுப்பதன் ஊடாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அமைச்சின் செயலாளர் எஸ். சோமவீர தெரிவித்துள்ளார்.

அதிகளவிலான பயணிகள் போக்குவரத்திற்காக ரயில் சேவைகளை நாடும் போதிலும், போதியளவு ரயில் பெட்டிகள் இன்மையால் அவர்களுக்கான சேவைகளை முறையாக வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

அதனால் மலையக ரயில் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக புதிதாக 20 ரயில் என்ஜின்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மைச்சின் செயலாளர் எஸ். சோமவீர குறிப்பிட்டார்.

அத்துடன் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் வாகன தரிப்பிடமொன்றை அமைத்து, வாகனங்களை அங்கு நிறுத்தி வைத்து கொழும்பிற்கு கடமைகளுக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு..!!
Next post மேல் மாகணத்தில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய அபாயம்…!!