இங்கிலாந்தில் ஆறுகளாக மாறிய வீதிகள்…!!

Read Time:2 Minute, 11 Second

ghghஇங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் ஒரே நாளில் கனமழை பெய்ததால்வீதிகளில்ஆறுகளைப் போல வெள்ளம் பெருக்கெடுத்துஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்ஷயர், லங்காஷயர் ஆகிய மாகாணங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்கிலாந்தின் கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

வெள்ளப்பெருக்கால், சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. நதிக்கரைகளில் இருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக இங்கிலாந்தின் வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், ” நாட்டின் சில பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, கடந்த ஒரே நாளில் (சனிக்கிழமை) பெய்துள்ளது, இதுவே வெள்ளப் பெருக்குக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரமாடி நகரை கைப்பற்றிய ஈராக் படைகளுக்கு அமெரிக்கா பாராட்டு…!!
Next post தோழியின் முன்னே ஆண் நண்பரை தாக்கிய பொலிஸார்: வெளியாகிய காணொளி…!!