காவல்துறை இணையதளத்தில் ஆபாச படங்கள்

Read Time:1 Minute, 25 Second

தமிழக காவல்துறை இணைய தளத்தை சில விஷமிகள் ஹேக் செய்து ஆபாசப் படங்களை பிரசுரித்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த படங்களை காவல்துறை இணைய தளத்திலிருந்து அகற்றி விட்டனர். தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை நேற்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். காரணம் காவல்துறையினரின் படங்கள் இருக்க வேண்டிய இடங்களில் ஆபாசப் படங்கள் இருந்ததுதான். இந்தத் தகவல் காவல்துறை உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக அந்த ஆபாசப் படங்களை நீக்க நடவடிக்கை எடுத்தனர். மின்னல் வேகத்தில் செயல்பட்ட சைபர் கிரைம் போலீஸார், இரவுக்குள் அந்த ஆபாசப் படங்களை நீக்கி விட்டனர். ஆபாச இணையதளங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை இணையதளத்திலேயே ஆபாசப் படங்களை புகுத்திய விஷமிகள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நொச்சிகாமம் சண்டியன் நள்ளிரவில் சுட்டுக் கொலை
Next post திருமணத்தில் பெண் பலி