கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறியளவிலான நில அதிர்வு…!!

Read Time:1 Minute, 46 Second

Seismograf-cutremurகண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

நேற்று இரவு 10 .17 மணி அளவில் கண்டி மற்றும் மாத்தளை பகுதிகளிற்கு அண்மித்த பிரதேசங்களில் நில அதிர்வு பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி சீ.எச்.ஈ.ஆர் சிறிவர்ந்தன கூறினார்.

3 ரிக்டர் அளவுக்கும் குறைவான நில அதிர்வே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்லேகலையில் அமைந்துள்ள புவி சரிதவியல் ஆய்வு மையத்திலும் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

கண்டி, எல்லெபொல, வெவேகம, கிதுலெமட, மாரிபே தென்ன உள்ளிட்ட பல கிராமங்களில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்தது.

இருப்பினும் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என புவிச்சரிதவியல் தொடர்பான பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறினார்.

நீர் நிலைகளுக்கு அருகில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படுவது சாதாரணமான ஒரு விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சண்டிகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு: 6 பேர் பலி…!!
Next post மாணவிகள் HOSTEL இல் அடிக்கும் லூட்டி…!!