20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்…!!

Read Time:2 Minute, 8 Second

1078809368Untitled-2எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் தொடர்பான பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு முதல் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டம் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி இந்த வருடத்தில் நூற்றுக்கு 70 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்தில் இதனை நூற்றுக்கு நூறு வீதமாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நோய்த் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளை இனம்கண்டு உரிய பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், குழந்தைக்கு எச்.ஐ.வி வரமல் பாதுகாக்க முடியும்.

இதேதேளை எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு பிரசவம் நடைபெற்று முடிந்துள்ளதோடு, பிரசுவிக்கப்பட்ட குழந்தைகள் எவரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும் சிசிர லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆணொருவருடன் நெருக்கமாக காணப்பட்ட பெண்ணொருவருக்கு பிரம்படித் தண்டனை…!!
Next post பம்பலபிடியில் ரயிலில் மோதி இருவர் பலி…!!