மக்களின் உணர்வுகளை அறிந்து தீர்வுகாண வேண்டும்..!!

Read Time:3 Minute, 13 Second

download (3)அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

பொதுமக்களின் உணர்வுகள், தேவைகள், துன்பதுயரங்கள் ஆகியவற்றுக்கு நன்கு செவிமடுத்து, எம்மிடம் வரும் மக்களின் தேவைகளைத் தெரிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பணியாற்றுவது எமது பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (1/1) தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தப் பணிகளை நீங்கள் நன்றாக நிறைவேற்றியதாக நான் நம்புகிறேன். புத்தாண்டில் எமது சேவைகளில் வினைத்திறன், இணைப்பு, மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்கி மிக மகிழ்ச்சியாக வாழச் செய்யும் பாரிய பொறுப்பும் உங்களுக்கே உண்டென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்ட செயலக அலுவலகத்தில் புத்தாண்டு தினப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரச அதிகாரிகளுக்கு மட்டுமன்றி நாட்டின் சகல பிரஜைகளுக்கு நாட்டைப் பற்றிய நோக்கு உள்ளது. சகலரும் நாட்டுக்கு ஆதரவாக உள்ளனர். அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் சகலருக்கும் பொறுப்பும் கடமையைச் செவ்வனே நிறைவேற்றும் அறிவும், தமது துறை பற்றிய தெளிவும் இருக்க வேண்டும்.

எமது நாட்டில் அரச சேவையில் ஈடுபட்டுள்ள சகலருக்கும் சுதந்திர மனதுடன் துயரங்கள் இன்றி, அச்சுறுத்தல்கள் இன்றி தமது அறிவுக்கு ஏற்ப கடமைகளை நிறைவேற்றும் சுற்றாடல் எப்போதும் காணப்படவேண்டும். 2015 ஜனவரி 8ஆம் திகதி நாட்டு மக்களின் பிரதான சேவகனாக நான் தெரிவான பின்னர் பல அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்துள்ளது.

19ஆவது யாப்புத் திருத்தம் விசேடமான வரலாற்று முக்கிய நிகழ்வாகும்.

உருவாக்கப்பட்ட பல்வேறு சுயாதீனக் குழுக்கள் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன.

2016ல் கிடைக்கும் நிதிமூலம் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ஓலைக் குடிசைகள் வீடுகளாக மாறும்.

இதற்காக குறைந்த வருமானம் மிக்க குடும்பங்களுக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் இங்கு உள்ள குறைபாடுகள் சகலவற்றையும் போக்க இயலுமென நம்புகிறேன்.

இவ்வாறு ஜனாதிபதி தமது உரையில் கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை..!!
Next post பலூனில் மொபைல் உரை எப்படி செய்வது…?