சீனாவில் 37 பல்கலைக்கழகம், பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது…!!

Read Time:1 Minute, 45 Second

74f5e96e-ab8f-4107-a045-8657050a0734_S_secvpfசீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து மரிஜுவானா என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் ஆவார். இவர் 31 மாகாணங்களில் உள்ள 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து உள்ளார். ஹாங்காங் உள்பட பல நகரங்களிலும் இதனை விற்பனை செய்து வந்து உள்ளார். சன் என்ற புனைப்பெயருடன், சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் இவற்றை விற்பனை செய்து உள்ளார்.

விவசாயத் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள சன், தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலேயே மரிஜுவானாவை வளர்த்து பதப்படுத்தி விற்பனை செய்துவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் கிடங்குகள் மீது பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்…!!
Next post முதியோர் இல்லத்தில் மூதாட்டி சாவு: விசாரணை நடத்த கோரி மகன் போலீசில் புகார்…!!