பவானிசாகர் வனப்பகுதியில் அதிகரித்து வரும் ராஜாளி கழுகுகள்…!!

Read Time:2 Minute, 33 Second

905d30c7-d9a3-4781-8683-25fb2d2e7eb4_S_secvpfஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆங்காங்கே பினந்தின்னி கழுகுகள் (ராஜாளி) வசித்து வந்தன. இந்த ராஜாளி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

பவானிசாகர் வனப்பகுதியிலிருந்து நீலகிரி மாவட்டம் தெங்குமரகடா செல்லும் சமவெளி வனத்தில் இந்த கழுகுகள் கண்ணில் அதிகமாக தென்படுகிறது.

சமமான பகுதி என்பதாலும் இந்த வனத்தில் வற்றாத மாயாறு ஓடுதாலும் ஏராளமான வன விலங்குகள் வசிக்கிறது. அதிலும் ஏராளமான மான் வகைகளும் மேலும் காட்டெருமைகளும் கூட்டம் கூட்டமாக வசிக்கிறது.

இரைகள் அதிகமாக இருப்பதால் இந்த காட்டில் புலி, சிறுத்தைகளும் கணிசமாக உள்ளது. மான் மற்றும் காட்டெருமையை வேட்டையாடி பாதி உடலை தின்று மீதி உடலை போட்டு செல்லும் போது அந்த உடலை சாப்பிட ராஜாளி கழுகுகள் பறந்து வருகிறது.

அந்த வழியாக செல்லும் போது ஆங்காங்கே உள்ள மரத்தில் அத்தி பூத்தாற் போல் ஒன்றிரண்டு கழுகுகள் தென்படும். ஆனால் இப்போதே கூட்டம் கூட்டமாக தென்படுகிறது.

இந்த ராஜாளி கழுகுகள் ஒரு குட்டி மானை கூட தன் வாயால் கவ்வி கொண்டு பறக்குமாம். எங்கேயேவாது சிறுத்தையோ.. புலியோ தன் இரையை அடித்து ரத்தத்தோடு சாப்பிடும் போது எங்கே இருந்தாலும் அந்த ரத்த வாடையை நுகர்ந்து ராஜாளி கழுகுகள் பறந்து வந்து விடும் என்கின்றனர் வனத்துறையினர்.

மேலும் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் வன ஊழியர்கள் கூறும் போது, ‘‘முன்பு எங்கள் கண்களுக்கு இந்த ராஜாளி கழுகுகள் ஒன்றிரண்டு தென்படும். ஆனால் கடந்த சில மாதமாக அதிக அளவில் ராஜாளி கழுகுகள் தென்படுகிறது. இந்த ராஜாளி கழுகுகள் வனத்தில் வசிப்பது வனத்துக்கும் ஒரு அழகு தான்’’ என்று கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் ஒரே நாளில் 47 பேர் தலை துண்டித்து கொலையா?: ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை…!!
Next post புலிட்சர் பரிசை வென்ற கோரமான புகைப்படமும் – புகைப்படக் கலைஞரின் தற்கொலை மரணமும்…!!