பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி தலைமையில் மகத்தான வரவேற்பு..!!

Read Time:2 Minute, 8 Second

timthumb (1)மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தெற்காசியாவின் 2 ஆவது பொருளாதார பலமிக்க நாடான பாகிஸ்தானுடன் இலங்கை நீண்ட கால உறவைப் பேணி வருகின்றது.

மூன்றாவது தடவையாகவும் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்படட நவாஸ் ஷெரீப் ஆசிய வலயத்தில் சிறந்த அனுபவமிக்க தலைவர்களுள் ஒருவராவார்.

இதன் அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமரின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் விஸ்தரிப்பதற்கு காரணமாய் அமையும் என நம்பிக்கை வெளியடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற பாகிஸ்தான் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் கண்டி நகரிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்டவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை சில வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேட்டுப்பாளையத்தில் குப்பை தொட்டியில் பெண் குழந்தை பிணம்: தாயிடம் போலீசார் விசாரணை..!!
Next post வட்டவளை வேன் விபத்தில் – 5 பேர் காயம்..!!