சந்தேகத்தில் கைதான 2554 பேரில் 2352 பேர் விடுதலை! 100 எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் தடுத்து வைப்பு! அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தகவல்

Read Time:4 Minute, 16 Second

கடந்த சில தினங்களில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் 100 பேர் இருப்பதாக பெருந்தெருக்கள் அபிவிருத்தியமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது: கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேடுதல் நடிவடிக்கைகளை படையினர் ஆரம்பித்தனர். இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்நத 2185 பேரும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 369 பேருமாக மொத்தம் 2554 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தமது அடையாளத்தை நிரூபித்த 1959 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர் உரிய விசாரணைகளின் பின்னர் மேலும் 399 பேர் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 100 பேர் எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 86 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 14 பேர் மலையகப் பிரதேசத்தவர்கள். மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத மற்றும் 102 பேர் நீதி மன்றத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகள் ஆட்கள் பதிவு திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவர்.

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்கள் வகை தெகையின்றி கைது செய்யப்படுகின்றனர் என்று சில ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்திவருகின்றன. இதில் எவ்வித உண்மையும் இல்லை.

அரசாங்கம் எந்த ஒரு இனத்தின் மீதும் பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் மக்களல்ல. முஸ்லிம்களும் சிங்களவர்களும்கூட இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் பொய்யானதே. அது உண்மையென்றால் நான் இந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கமாட்டேன். வெளியேறிவிடுவேன். ஏனெனில் நானும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவனே.

தமிழ் தேசிய கூட்டணியினருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. ஏனெனில் அவர்கள் கொழும்பில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அரசாங்க எம்.பி.க்களை வடவும் கூடுதலான பாதுகாப்பை அரசாங்கம் அவர்களுக்கு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கைது செய்யப் பட்டிருக்கும் அப்பாவி மக்களின் விடுதலை குறித்து ஐனாதிபதியுடனான சந்திப்பில் EPDP செயலாளர் நாயகம் டக்ளஸ் எடுத்துரைப்பு!
Next post டென்ஷனைக் குறைக்க உல்லாச பயணம்தான் வழி